உன் குடும்பத்தையே அழிச்சிடுவேன்னு மிரட்டுனாங்க – சொத்து தகராறால் ஏற்பட்ட பிரச்சனை. கண்ணீருடன் சொன்ன கோலங்கள் சீரியல் நடிகர்.

0
986
MohanSharma
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் மோகன் சர்மா. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் படங்களில் நடித்திருக்கிறார். இவர் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த சட்டகாரி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்புக்காக இவர் பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைவுடன் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருந்தார். குறிப்பாக கோலங்கள் சீரியலில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பின் சமீப காலமாக இவர் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இவருடைய வீட்டு பிரச்சினை தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. அதாவது, மோகன் சர்மாவுக்கு சொந்தமாக போயஸ் கார்டனில் வீடு இருக்கிறது.

- Advertisement -

அவரது வீட்டை இடை தரகர்ககள் மூலம் விற்பனை செய்துள்ளார். ஆனால், அந்த வீட்டில் இடைத்தரகர் சேகர் அவருடைய மகனும் தங்கி இருந்தார்கள். இதை அடுத்து மோகன் ஷர்மா போலீசில் புகார் அளித்தார். அதனை அறிந்து கொண்ட சேகர் ஆட்களை வைத்து மோகன் ஷர்மாவை தாக்கி இருக்கிறார்கள். இந்த தாக்குதலில் நடிகர் மோகன் கண்களுக்கு கீழே காயமும் கை மற்றும் கால் முட்டைகளில் சிராய்வு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மோகன் சர்மா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

மோகன் சர்மா பேட்டி:

தற்போது மோகன் சர்மா நலமாக இருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், போயஸ் கார்டன் பகுதியில் இருந்த என்னுடைய வீட்டை விற்க விளம்பரம் கொடுத்திருந்தேன். அப்போது ஒரு புரோக்கர் அறிமுகமாகி அவரை வாங்குவதற்கு ஆள் கூட்டிட்டு வருவதாக சொன்னார். அதனால் வீட்டு சாவியை அந்த புரோக்கரிடம் கொடுத்திருந்தேன். கொஞ்ச நாட்கள் கழித்து அவர் ராஜாராமன் என்ற ஒரு டாக்டரை அழைத்து வந்தார். அவர் வீட்டின் மீது இருந்த கடனையும் மிச்சம் பணத்தையும் தந்துவிட்டார்.

-விளம்பரம்-

வீட்டை வாங்கிய நபர்:

முறைப்படி வீட்டை அவருக்கு விற்று விட்டேன். அப்போதே டாக்குமெண்ட் கைமாறிவிட்டது. அந்த டாக்டரிடம் வீட்டு சாவியை வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவர்தான் புரோக்கர் கிட்ட தானே இருக்கு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார். திடீரென்று ஒரு நாள் வீட்டை வாங்கின டாக்டர் போன் செய்து புரோக்கர் தன்னுடைய குடும்பத்தை அந்த வீட்டில் வைத்து வைத்திருக்கிறார். சாவியை கேட்டால் மிரட்டுகிறார். வீட்டை எனக்கு வாங்கி கொடுங்கள் என்று சொன்னார். பின் நான் அந்த புரோக்கர் இடம் பேசினேன்.

ப்ரோக்கர் செய்த வேலை:

அவர், இனி இந்த பிரச்சனையில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று சொன்னார். இருந்தாலும் டாக்டருக்கு ஆதரவாக நான் இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு கொண்டு போனேன். இந்த விவகாரத்தில் தலையிட்டால் ஒலித்து கட்டி விடுவோம் என்றெல்லாம் மிரட்டினார்கள். என் வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் காரில் நான் சென்று கொண்டிருந்தபோது என்னை வழி மறைத்து சிலர் வீட்டை காலி செய்யணும்னு நினைத்தால் இந்த விவகாரத்தில் தலையிட்டால் மூஞ்சில் ஆசிட் ஊத்தி விடுவோம் என்று மிரட்டி இருந்தார்கள். பின் அந்த மர்ம நபர்கள் என்னை தாக்கினார்கள். அந்த புரோக்கருக்கு அரசியல் பின்னணி இருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், சொத்து யார் பெயரில் இருக்கிறது? டாக்டர் இந்த விவகாரம் குறித்து ஏன் அமைதியாக இருக்கிறார்? என்று தெரியவில்லை.

Advertisement