தற்போது கொரானா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதன் பரவல் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இந்த பாதிப்பை தடுக்க வரும் ஏப்ரில் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து. கொரானா பாதிப்பை தடுக்க அணைத்து மாநில முதல்வர்களும் போராடி வருகின்றனர். அதிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தவிர்க்க சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அயராது உழைத்து வருகிறார். இதனால் பல்வேறு மக்களும் அமைச்சர் விஜயபாஸ்கரை மனதார பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின் போது வழக்கம் போல தனது வித்யாசான செயல் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு மக்களின் சார்பில் வழங்கினேன்.
இதையும் பாருங்க : அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயார். ஒரு டீவீட்டில் பாராட்டை பெற்ற கமல்.
இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன் அந்த யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார் என்று பதிவிட்டுள்ளார். பார்த்திபனின் இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த பார்த்திபன், இப்படி உலகம் முழுக்க இந்த நோய் பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதைப் பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது. 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே உருவாக்க வேண்டும். அதாவது இரண்டு வீடுகள் இருந்தால் அதில் ஒன்றை இந்த கரோனாவைக் குணப்படுத்தும் மருத்துவமனையாகக் கொடுக்க முன் வரலாம் . எனக்கு 3 பிளாட் இருக்கு அதையும் கொடுக்க தயார்.
அதுபோல தெருவுக்கு தெரு இப்படி பட்ட மருத்துவ வசதி செய்து கொள்வது பெரிய உதவியாயிருக்கும்” என்று கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் வசதி அதிகமாக இருக்கும் ஹீரோக்கள் கூட உதவி செய்ய யோசிக்கும் நேரத்தில் சராசரியாக வாழ்ந்துவரும் பார்த்திபன் தனது வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது பார்த்திபனை தொடர்ந்து உலக நாயகன் கமலும், தனது வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்திகொள்ள கூறியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் ட்வீட் செய்திருந்த கமல், இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.