தற்போது உலக நாடுகள் முழுக்க தற்போது பெரும் பீதியை கிளப்பியுள்ளது இந்த கொரோனா வைரஸ் தான். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸானது தற்போது உலகம் முழுக்க 190 நாடுகளில் பரவியுள்ளது. இங்கிலாந்து அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகள் கூட இந்த நோயின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், இந்த நோய்க்கு தற்போது வரை மருந்து எதுவும் கண்டு பிடிக்கப்பட்டதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பின் படுத்தப்பட்டு வருகிறது மேலும் இந்தியாவில் இன்று முதல் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்த உத்தரவால் நாடு முழுவதும் உள்ள சிறு தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தினக்கூலி வேலை செய்பவர்களின் வாழ்வாதாரமே கேள்வி குறி ஆகிவிட்டது. இதுகுறித்து ட்வீட் செய்திருந்த கமல், உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்.
கமலின் இந்த கருத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலரோ நீங்கள் என்ன உதவி செய்தீர்கள் என்று விமர்சனம் செய்திருந்தனர். இந்த நிலையில் விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமல் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான் என்று பதிவிட்டுள்ளார்.
மக்களின் நிலை அறிந்து கமல் அறிவித்துள்ள இந்த அறிவிப்பிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கமலின் இந்த அறிவிப்பிற்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே நடிகர் பார்த்திபன். பொதுவான மருத்துவமனை தேவை என்பதற்காக தனக்கு கே.கே நகரில் 3 பிளாட்கள் இருக்கிறது. அந்த பிளாட்களை நான் கொடுத்து உதவலாம். இந்த மாதிரி இரு வீடுகள் வைத்திருப்பவர்கள் ஒரு வீட்டை தற்காலிக ஆஸ்பத்திரிக்கு கொடுக்கலாம். இது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. இது எனது ஒரு யோசனை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.