தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. எப்போதும் இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது.ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது.
கடந்த சில காலமாக உடல்நிலை குறைவால் இருந்து வரும் கவுண்டமணி படங்களில் இருந்து நடிப்பதையும் நிறுத்தி விட்டார்.80 காலகட்டங்களில் தொடங்கி 20 காலம் முதல் பல்வேறு படங்களை நடித்துள்ளார் கௌண்டமணி. இந்த நிலையில் கவுண்டமணி குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கவுண்டமணி குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் கவுண்டமணி மிகவும் வித்தியாசமான ஒரு நடிகர் அவரின் நடிப்பை விட அவரின் ஆட்டிட்யூட் ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும். அவருடைய நடவடிக்கை எல்லாம் ஹாலிவுட் நடிகர் போலத்தான் இருக்கும். ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால் சரியாக ஏழு மணிக்கு வந்துவிடுவார். டாட்டா பிர்லா படம் அவருடன் நடித்தபோது அவரை நான் கூர்ந்து கவனித்தேன். அவர் அவருடைய வாழ்க்கையே மிகவும் ஸ்டைலிஷாக வாழ்ந்து வந்தார்.
ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால், எப்படி வாழ்வது என்று தெரியாது. ஆனால் கவுண்டமணி வாழ்க்கையை ரசித்து வாழ்வார். உதாரணமாக எந்த ஊரில் சூட்டிங் நடந்தாலும் அங்கு இருக்கும் 5 ஸ்டார் அல்லது செவன் ஸ்டார் ஹோட்டலில் தான் அவர் தங்குவார். மிகவும் விலை உயர்ந்த விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பார். குறிப்பாக அவர் நிறைய ஆங்கிலப் படங்களை தான் பார்ப்பார் என்று கூறியுள்ளார்.