என்னது பிரபு மகளுக்கு இது இரண்டாவது திருமணமா? அவரின் முதல் கணவர் பிரபுவின் குடும்பத்தை சேர்ந்தவர் தானாம்.

0
787
- Advertisement -

நடிகர் பிரபுவின் மகளுக்கு பிரபல இயக்குனர் உடன் திருமணம் நடைபெற இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரபு. இவர் வேற யாரும் இல்லைங்க நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் தான். சிவாஜிக்கு ஒரு மகன் மற்றும் மகன் இருக்கிறார். இவரது மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆனால், இவரது மகளை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா பிகாம் டிகிரியை(B.Com) எத்திராஜ் கல்லூரியில் படித்து இருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, குணால் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. நடிகர் பிரபுவின் தங்கை தேன்மொழி மகன் தான் குணால். குணால் அவர்கள் யூகேவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய திருமணம் சென்னையில் உள்ள சிவாஜியின் வீட்டில் சிறப்பாக நடை பெற்றது.

- Advertisement -

இந்த திருமணத்தில் ஜெயலலிதா உட்பட பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர். சிவாஜி குடும்பத்தில் சொந்தத்தில் திருமணம் செய்வது வழக்கமான ஒரு விஷயமாக தான் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் சொந்தம் விட்டுப்போகிவிடக்கூடாது என்பதற்காக தான் பிரபு தனது மகளை தனது தங்கை தேன்மொழியின் மகனான குணாலுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனால், இவர்கள் திருமண பந்தம் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக முறிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவாகரத்துக்கு பின் மீண்டும் சென்னை திரும்பிய பிரபுவின் மகள் ஐஸ்வர்யா கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்திருக்கிறார். இவர் மெல்ட்ஸ் டெசர்ட் (meltz.dessertz) என்ற நிறுவனத்தை தொடங்கிஇருந்தார். ஆர்டரின் பேரில் கேக் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்தார்.

-விளம்பரம்-

இதற்காக அவர் இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பித்துஇருந்தார். அதில் அவர் தான் தயாரித்த விதவிதமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அவர் தயாரித்த கேக்கின் புகைப்படங்களை பதிவிட்டுவந்தார். பிறந்தநாள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளாக கேக் தயாரித்து வழங்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் நடைபெற இருக்கிறது.

தற்போது பிரபுவின் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் குடும்பமும் திருமண வேளைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று இருந்தது. இதை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய அடுத்த படத்தை தல அஜித்தை வைத்து இயக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

Advertisement