தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி 58 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து அனல் பறந்து கொண்டு சென்றிருக்கிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியில், உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுத்து இருந்தார் பிக் பாஸ். அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயத்தை கூறியிருந்தார்கள்.
பிக் பாஸ் 7:
அதில் விசித்திரா பேசி இருந்தது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பலரும் விசித்திராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் வீட்டில் 14 பேர் இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இன்னும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக கடந்த வாரத்தின் தொடக்கத்தில் பிக் பாஸ் அறிவித்து இருந்தார். பின் போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும். அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம். தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர் வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.
பிக் பாஸ் டாஸ்க்:
அதன்படி கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்களும் திறமையாக விளையாடினார்கள். ஆனால், இரண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்று விட்டார்கள். ஒன்றில் மட்டும் தான் வெற்றி பெற்றார்கள். இதனால் இரண்டு வைல்ட் கார்டு நபர்கள் உள்ளே வருகிறார்கள். அந்த வகையில் பிராவோ- அக்ஷயா இருவரும் எலிமினேட் ஆகிருக்கிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பிராவோ-அக்ஷயா இருவரும் பெரிதாக எந்த ஒரு ஈடுபாடுடனும் சுவாரசியமாகவும் விளையாட வில்லை.
அக்ஷ்யா சம்பளம்:
இவர்கள் இருவரும் ஏற்கனவே வெளியேறி விடுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதோடு அக்ஷயாவை எல்லாம் அவர்களுடைய ரசிகர்கள் தான் இத்தனை நாட்கள் காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் பிராவோ-அக்ஷ்யா வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அக்ஷயா நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு இருக்கிறார். இதுவரை இவர் பிக் பாஸ் வீட்டில் 54 நாட்கள் இருந்திருக்கிறார். இவருக்கு மொத்தமாக 10 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பிராவோ சம்பளம்:
பிராவோ வைல்ட் கார்ட் போட்டியாளராக தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் நுழைந்த இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் வெளியேறி இருக்கிறார். இவருக்கு ஒரு நாளைக்கு 18,000 சம்பளம். ஆக மொத்தம் இவர் 8 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். தற்போது நிகழ்ச்சியில் இவர்களுக்கு பதிலாக விஜய் வர்மா, அனன்யா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இவர்களை அடுத்து மூன்றாவது வைல்ட் கார்ட் போட்டியாளராக வினுஷா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டார். இவரை அடுத்து யுகேந்திரனும் ஐடியா இல்லை என்று சொல்லி விட்டார். ஆக மொத்தம் அனன்யா, விஜய் வர்மா வைத்து மட்டும் நிகழ்ச்சி சூடு பிடித்து சென்று கொண்டிருக்கின்றது