இந்த உலகில் நான் வெறுப்பது இதைத் தான் என்று பிரபுதேவா மனம் திறந்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனருமாக திகழ்பவர் பிரபுதேவா. அதிலும் பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளரும் ஆவார்.
மேலும், இவருடைய தனித்துவமான நடனத்திற்கு இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்திருந்த மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, தேள் போன்ற படங்களை எல்லாம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் பகீரா. இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.
இதனை அடுத்து பிரபு தேவா அவர்கள் ஊமை விழிகள், எங் மங் சங், முசாசி, உல், ஃப்ளாஷ் பேக் போன்ற பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்திலும் பிரபுதேவா கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை வீடியோ வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது .
பிரபுதேவா குடும்பம்:
இதனிடையே பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவாவுக்கு நடிகை நயன்தாரா மீது காதல் மலர்ந்தது. இதனால் பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். இருந்தும் பிரபு தேவா, நயன்தாரா இடையே பிரச்சனை அதிகமாகி பிரிந்தார்கள்.
பின்னர் பிரபு தேவா தனியாக தான் வாழ்ந்து வந்தார். பின் இரண்டாவதாக மருத்துவர் ஹிமானி சிங்கை பிரபுதேவா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரபுதேவா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நாம் எப்போதும் குழந்தைகளுடன் ரொம்ப நெருக்கமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். காரணம், அவர்களுக்கு சிறிதாக உடம்பு சரியில்லை என்றாலும் நமக்கு ஏதேதோ செய்து விடும். அவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு வேண்டிய விஷயங்கள் எல்லாம் கிடைக்க வேண்டும், சமூகத்தில் பெரிய ஆளாக வேண்டும் என்று அவர்களைப் பற்றியே நினைப்பாக இருக்கும்.
குழ்நதைகள் குறித்து சொன்னது:
இதனால் தலைவலியே வந்துவிடும். உண்மையிலேயே எனக்கு அது வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. எல்லாவற்றிலும் சிறிதளவு இடைவெளி எடுத்து இருந்தால் இந்த உலகத்தில் நீங்கள் தான் ராஜா. நான் அதை முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். ஆனால், நடக்கவே இல்லை. அப்படி இருந்தும் அடுத்த நாள் இன்னும் அந்த எண்ணம் அதிகமாகி விடுகிறது. எதனுடனும் ஒரு சிறிய இடைவெளி இருப்பது நல்லது. குறிப்பா, குழந்தைகளுடன் நாம் நெருக்கமாக இருப்பதை விட கொடுமையானது வேறு எதுவும் இல்லை. என்னுடைய ஒரு மகனுக்கு 20 வயதாகிறது, இன்னொரு மகனுக்கு 15 வயகிறது. ஆனால், இன்னமும் அவர்களை நான் ஒரு சிறு குழந்தை போல தான் பாவிக்கிறேன். அதை நினைக்கும் போது எனக்கு கொஞ்சம் கேவலமாக தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.