விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்னதம்பி” என்ற சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் நடிகர் ப்ரஜின் பிரபலமானவர். தற்போது அவர்கள் “அன்புடன் குஷி” என்ற புதிய தொடரில் நடிக்கிறார். இந்த சீரியல் வருகிற ஜனவரி 27 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது என்று அறிவித்து உள்ளார்கள். சின்னத்தம்பி சீரியலுக்கு பிறகு நடிகர் ப்ரஜின் ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார். அடுத்ததாக இவர் நடிக்கும் சீரியல் “அன்புடன் குஷி”. இந்த சீரியல் பார்ப்பதற்கு காதல் கதை அம்சங்களை கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் இவருக்கு சமீபத்தில் தான் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. இந்த இரட்டிப்பு சந்தோஷத்தில் ப்ரஜின் அவர்கள் பேட்டி அளித்து உள்ளார். அவர் கூறியது, சின்னதம்பி சீரியலுக்கு பிறகு ஏழு மாத இடைவெளி எடுத்து கொண்டேன். தற்போது அன்புடன் குஷி என்கிற சீரியலில் நான் கமிட்டாகி இருக்கிறேன்.
இந்த ஏழு மாசம் வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவு செய்து கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் எனக்கு கடவுள் கொடுத்த கிப்ட். வீட்டில் அவர்களுடைய சேட்டைகளை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். முதல் தேவதையுடன் பெயர் ருத்ர பாலா. இரண்டாவது தேவதையுடன் பெயர் மித்ர பாலா. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் கூட ஓரிடத்தில் உட்கார மாட்டார்கள். இரண்டு பேரையும் சமாளிக்கிறதே பெரிய விஷயம். அதுக்காகவே என் மனைவிக்கு சூப்பர் மாம் பட்டம் கொடுக்கலாம். 3 நிமிஷம் வித்தியாசத்தில் இரண்டு பேரும் பிறந்தார்கள். என்னுடைய குழந்தைகளால் தான் என்னுடைய வாழ்க்கையே மாறியது. அன்புடன் குஷி சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். மெட்ராஸ் படத்தில் வரும் கார்த்திக் ரோலை நினைவுபடுத்தும் என்று நினைக்கிறேன்.
வடசென்னையில் ஒரு சின்ன வீட்டில் குடும்பத்தோடு வசிக்கிர கதாபாத்திரம் தான் என்னுடையது. அன்பு மட்டுமே நிறைந்து இருக்கும் ஒரு அழகான கூட்டுக்குடும்பம். அந்த ஏரியாவில் நடக்கும் நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பு. அப்படி ஒரு கதாபாத்திரம். அதே ஏரியாவில் வசிக்கும் வட இந்தியப் பொண்ணு தான் குஷி. அவருடன் காதல் ஏற்பட, எப்படி இருவரின் கலாச்சாரமும் ஒத்து போகுது,எப்படி இருவரும் கரம் பிடித்தார்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். இது வித்தியாசமான கதை களம் கொண்ட சீரியல். காமெடி, காதல், குடும்பம் என கமர்ஷியல் ஆகவே சீரியல் நகரும்.
இதுவரை சீரியலில் யாருமே பாக்ஸர் கதாபாத்திரம் எடுத்தது கிடையாது. இந்த சீரியலில் தான் முதன் முதலாக பாக்ஸர் ரோல் கொண்டு வந்திருக்கிறார்கள். அவ்வளவு சீக்கிரம் பாக்சிங் கத்துகிற விஷயம் கிடையாது. ஆனால், சின்ன சின்ன அடிப்படையான விஷயம் எல்லாம் கத்துக்க ரெண்டு மாதம் ஆகிறது. குஷி கதாபாத்திரத்தில் நடிப்பவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இந்த கதாபாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 3000 புகைப்படங்களை பார்த்து தான் ஆடிசன் பண்ணோம். இவர் இந்த கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கும் என்று தான் ஓகே சொன்னார் இயக்குனர். இவர்கள் தமிழுக்கு புதுசு.
ஆனால், முதல் நாளே இரண்டு பக்க தமிழ் டயலாக்குகளை மனப்பாடம் பண்ணி பேசினாங்க. என்னுடைய மனைவிக்கும் அவர்களை பிடித்து இருக்கு. உங்களுடைய ஜோடி சூப்பர் என்று என் மனைவி கூறினாள். அதுமட்டுமில்லாமல் அவங்க ரொம்ப அழகாக இருக்காங்க என்றும் பாராட்டினார். என் மனைவி எப்போதும் அவ்வளவு சீக்கிரமாக யாரையும் பாராட்ட மாட்டார்கள். அதுவும் ஒரு பொண்ணு இன்னொரு பெண்ணை பாராட்டுவது பெரிய விஷயம் என்று புன்னகையுடன் கூறினார்.