உங்களுக்கு தெரிந்த ஒரே மொழி என்பதால் தான் அதை திணித்து வருகீறிர்கள். அமித்ஷாவை விமர்சித்த பிரகாஷ் ராஜ் .         

0
876
- Advertisement -

இந்தியாவில் எப்போதும் தீராத பிரச்சனையாக இருப்பது இந்தி திணிப்புதான். பலர் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்தியாவிற்கு அப்படி ஒரு தேசிய மொழி எதுவும் கிடையாது. ஹிந்தி திணிப்பிற்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்புகளை  தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசும் அவ்வப்போது  இந்தியாவில் உள்ள ஒரு அனைவரும் இந்தி மொழியை கற்க வேண்டும் என்றும் கூறி வருகிறது இதற்கு அவ்வப்போது தென்னிந்திய மக்களிடம் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகின்றது.

-விளம்பரம்-

அமித் ஷா கூறியது:

அந்த வகையில் நேற்று இந்த தினத்தை முன்னிட்டு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் இந்த நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இந்தியாவில் பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஹிந்தி மொழியை பொறுத்தவரையில் எப்பொழுதும் ஜனநாயக மொழியாகவே இந்தி மொழி இருந்தது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பல்வேறு மொழிகளுக்கு இடையேயான ஒற்றுமையை ஏற்படுத்துமாக மொழியாக இந்தி மொழி இருந்து வருகிறது.

- Advertisement -

அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கான இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வழியாக இந்தி மொழி இருந்து வருகிறது ஐக்கிய நாடுகள் சபையிலும் எங்கே ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இந்தி மாநாடு இந்த வருடம் பூனாவில் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார். இன்று தினத்தில் முன்னிட்டு இந்தியா பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட இந்திய தேசிய ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தின் இழையை இந்தி மொழி தொடர்ந்து வலுப்படுத்த வாழ்த்துகள் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில் அந்த வகையில் தமிழக அமைச்சர்களும் அமித்ஷாவின் ஹிந்தி திணிப்பு கருத்துக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் அதை விமர்சிக்கும் வகையில் அவரும் எக்ஸ் தளத்தில் அவரது கருத்தை பதிவேற்றி இருந்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசின் கருத்தை விமர்சித்து வருவதும் சில தினங்களுக்கு முன் இஸ்ரோவின் சந்திராயன் 3 விமர்சித்து வந்தார். அதற்க்கு பல்வேறு தரப்பிரனரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிட தக்கது.

-விளம்பரம்-

பிரகாஷ் ராஜ் கருத்து:

நீங்கள் ஹிந்தி பேசுகிறீர்கள். உங்களுக்கு மையமாக இந்தி தெரியும். நீங்கள் எங்களை ஹிந்தியில் பேச வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள். உங்களுக்கு இந்தி தெரியும் என்பதால் நீங்கள் இந்தி பேசுகிறீர்கள். எங்களிடம் இந்தி பேசச் சொல்கிறீர்கள், ஏனென்றால் உங்களுக்கு தெரிந்த ஒரே மொழி என்பதால் தான் ஹிந்தியை திணித்து வருகீறிர்கள் என்றும் அமித்ஷாவை விமர்சித்து இருந்தார்.         

Advertisement