இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்சினை போல தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் காவிரி நீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் காவிரி நீர் வேண்டுமென்று டெல்டா விவசாயிகள் போராடி கொண்டுவரும் நிலையில் கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் தமிழகத்திற்கு காவேரி நீரை திறந்து விடக்கூடாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவின் துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் கூறியதில் நாங்கள் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இது குறித்து தமிழக அரசிற்கு அன்புமணி ராமதாஸ் ஒரு அறிவுரை வழங்கி உள்ளார் தமிழக அரசு இவ்வாறு செய்தால் காவேரி நீரை கர்நாடகா கண்டிப்பாக தருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்:
தமிழகத்தில் இன்றைக்கு முக்கியமான பிரச்சனை காவிரி நீர் பிரச்சனை. கர்நாடகா அரசு காவிரி நீரை திறந்து விடமாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து வல்லுநர்கள் திறந்து விட மாட்டோம் என கர்நாடகாவின் முதலமைச்சர் துணை முதலமைச்சர் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர். இந்த செயல் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. இதற்கு மத்திய அரசு தலையிட வேண்டும். ஏனென்றால் கர்நாடக அரசு யாரையும் மதிப்பதாக தெரியவில்லை.
கர்நாடகாவில் இந்த இரண்டு வாரங்களில் இரண்டு அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டியதில் அதில் அனைவரும் தமிழகத்திற்கு நீரை தரக்கூடாது என்று தான் கூறுகிறார்கள் ஆனால் தமிழக அரசு இதுவரை ஒரு முறை கூட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. இதற்கு தமிழக முதல்வர் கர்நாடகாவிற்கு சென்ற முதல்வரிடம் பேச வேண்டும் எங்களுக்கு இரண்டு லட்சம் ஏக்கரில் குறுவை வாடிக் கொண்டிருக்கிறது என்று இது எல்லாம் சொல்லி காவிரி நீரை வாங்க வேண்டும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவம் சரியாக முறையில் பொழியவில்லை.
இது குறித்து உச்ச நீதிமன்றம் இந்த வாழ்க்கையானது 21ம் தேதி விசாரிக்க உள்ளது இன்னும் அவ்வளவு நாட்களில் இருக்கும் நிலையில் இதுவரை நீர் வழங்கவில்லை என்றால் பயிர்கள் அனைத்தும் கருகிவிடும். இதற்கு தமிழக அரசு கர்நாடகா அரசிற்கு அழுத்தம் தர வேண்டும் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சென்று இந்த வழக்கு விரைவாக விசாரிக்க முயற்சி செய்ய வேண்டும் அனைத்து கட்சி கூட்டங்களை தமிழக அரசு கூட்ட வேண்டும். கர்நாடகா அரசு அவர்களின் கூட்டணி கட்சியில் தான் இருக்கிறார்கள்.
காவிரி காவிரி எங்கள் மாநிலத்தில் தான் உள்ளது நாங்கள் மேகதாது அணை கட்டிய தெருவோம் என்று கர்நாடகா அரசு கூறுவது கண்டிக்கத்தக்கது. இதேபோல் தமிழக அரசு ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும் அது என்னவென்றால் கூடங்குளத்திலும் கல்பாக்கத்தில் மற்றும் நெய்வேலியில் எடுக்கப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டும்தான் சேரும் என்றும் அதை நாங்கள் வேறு யாருக்கும் தரமாட்டோம் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்தால் என்ன ஆகும். இந்திய கூட்டாட்சி ஒருமைப்பாட்டில் யாரும் செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு சீர் கேடு பிரச்சனையை ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஓட்டு வங்கிக்காக தான் மேகத்தாது கட்டுகிறார்கள். என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.