“நாடாளுமன்ற தேர்தல், புதுச்சேரி தொகுதிகளில் பா ஜ க வெற்றி குறித்து ”- அண்ணாமலை கணிப்பு.

0
215
- Advertisement -

வரும் நாடளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வெற்றியை பெற்று தருவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரை தொடங்கி வைத்தனர்.  ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. 6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார். பாதயாத்திரையின் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் “என் மண் என் மக்கள் “ என்ற நடைபயணத்தை நேற்று முன்தினம் இரவில் மேற்கொண்டார். கோவிலூரில் தொடங்கிய நடைபயணம் பழைய பேருந்து நிலையம், ஐந்து விளக்கு பெரியார் சிலை வழியாக நூறடி சாலையை வந்து சேர்ந்தனர்.    

- Advertisement -

வெற்றி கூறித்து பேசிய அண்ணாமலை:

 வரும் நாடளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வெற்றியை பெற்று தருவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர் அதிகமான கடன் வாங்கியோர் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதென்றும் கூறினார். ஒவ்வொருவர் தலையிலும் ரூ 3.52 லட்சம் கடன் உள்ளது என்றும், இந்நிலையில் ஒரு குடும்பத்துக்கும் 1000 ரூபாய் தரவுள்ளனர். மதுக்கடைகள் மூலம் மட்டுமே திமுகவினர் வருடத்திற்கு 50 ஆயிரம் ருபாய் கோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர்.

மேலும் கூறிய அவர், அதிகமாக பேசி வந்த அமைச்சர் பொன்முடி அமலாக்க துறையின் சோதனைக்கு பிறகு தற்போது வாயை திறப்பது இல்லை என்றும் அவர் கூறினார். சிவகங்கை, புதுகோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். நடைபயணத்தின் போது பெண்கள் ஆட்சி மாற்றம் வேன்றுமென்று கோபம் அவர்களிடம் தெரிகிறது என்றார்.

-விளம்பரம்-

காரைக்குடியில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன் (39 வயது) ராணுவ பனியின் போது இடுப்புக்கு கீழ் பகுதி செயலிழந்தது கூறித்து நலம் விசாரித்தார். அவரது குழந்தைகளுக்கு திருக்குறள் புத்ததகத்தை பரிசாக அளித்தனர். உதவி தேவைபட்டால் தன்னை அழைக்குமாறு கூறினார். நடைபயணத்தின் போது ஒய்வு பெற்ற காவல் அதிகாரிகள் 12 பேர் அண்ணாமலையின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.                 

Advertisement