தனது மகன் மற்றும் மகளை கட்டி அணைத்தபடி பிரசன்னா வெளியிட்ட புகைப்படம்.

0
58687
prasanna
- Advertisement -

தமிழ் சினிமா துறையில் குயூட் கபுல்களில் ஒருவர் சினேகா பிரசன்னா ஜோடி. சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சிநேகாவிற்கு பெண் குழந்தை பிறந்து. இருந்தது . இந்த செய்தியை ஒரு வித்யாசமான புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரசன்னா ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி ஸ்னேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

மேலும், தனது மகள் குறித்து பதிவிட்டிருந்த ஸ்னேகா, என் வாழ்க்கை இப்போது தான் ரொம்ப அழகாக உள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.இதற்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை சினேகா,முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

- Advertisement -

குட்டி சினேகாவை கண்ட ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.இது ஒரு புறம் இருக்க தங்களது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டோம்.

அதனால் நாங்கள் ஆத்யா என்ற பெயரை வைக்கலாம் என்று யோசித்தோம். ஆனால். ,முதல் குழந்தை ஆண் குழந்தையாக போய்விட்டது. தற்போது என் மகளுக்கு ஆத்யா என்ற பெயரை தாண்டி வேறு எந்த பெயரையும் யோசிக்க தோணவில்லை. எனவே, கொஞ்சம் வித்யாசமாக ஆத்யந்தா என்று வைத்துளோம் என்று கூறியிருந்தார். இப்படி தனது மகள் மற்றும் மகனை கட்டி அணைத்தபடி இருக்கும் குயூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் பிரசன்னா.

-விளம்பரம்-
Advertisement