‘யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணார்’ – அச்சு அசலாக ரகுவரன் போலவே இருக்கும் அவரின் சகோதர் அளித்த பேட்டி

0
2730
Raghuvaran
- Advertisement -

ரகுவரன் இறப்புக்கு காரணம் குறித்து அவருடைய சகோதரர் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் ரகுவரன். 80ஸ் காலகட்டம் தொடங்கி 2000 காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். முதன்முதலில் ரகுவரன் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தில் தான் அறிமுகமானார்.

-விளம்பரம்-
raghuvaran

அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன் அதன் பின் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொரிந்து போனது. பின்னர் இவர் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

- Advertisement -

ரகுவரன் திரைப்பயணம்:

மேலும், 90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக பிரபலமாக இருந்தார். தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ரகுவரன். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது.

ரகுவரன் – ரோகினி :

ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். ரகுவரன் மற்றும் ரோகிணி பிரிந்த நான்கு வருடங்களில் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் ரகுவரன் இறந்தார். இந்நிலையில் ரகுவரன் இறப்பு குறித்து அவருடைய சகோதரர் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ரகுவரன் சகோதரர் அளித்த பேட்டி:

அதில் அவர், ரகுவரன் ரொம்ப ரொம்ப சென்சிட்டி. ஆனால் குடும்ப சூழ்நிலைகளால் தான் அவர் தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு மகன் ரிஷி என்றால் உயிர். ரகுவரன் ரிசியுடன் ரொம்ப சந்தோஷமாக இருப்பார். ஆனால், அவருக்கு ரிஷி உடைய தேவை அதிகம் தேவைப்பட்டது. அதனால அவர் மனரீதியாகவும், உடல் உடல் ரீதியாகவும் ரொம்ப பாதிக்கப்பட்டார். அதோடு அவருடைய இறப்புக்கு முக்கியமான காரணம் மது பழக்கம் தான். அதிகமாக மது அருந்தினார்.

Raghuvaran actor

இறப்புக்கு காரணம்:

ஒரு கட்டத்தில் அவர் மது பழக்கத்தை விட்டார். பின் மீண்டும் அதை அவர் கையில் எடுத்தார். ஆனால் இறுதி காலத்தில் இறக்கும்போது அவர் எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுவிட்டு தான் வாழ்ந்தார். அதேபோல் இறப்பதற்கு முன்பு தனுஷ் நேரடியாக வந்து ரகுவரிடம் கேட்டதினால் தான் அவர் நடிக்க ஒற்றுக்கொண்டார். அது மட்டும் இல்லாமல் நீ என்னுடைய மகன் போல் இருப்பதினால் தான் நடிக்கிறேன் என்றும் கூறியிருந்தார். அதற்கு பின் தான் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. ஒரு நாள் திடீரென்று நெஞ்சு வலி வந்தது. சிகிச்சை அளித்தும் இறந்து விட்டார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement