என்னது, ரகுவரன் இவ்ளோ சூப்பரா பாடுவாரா ? அவரது குரலில் பாடி ரஜினி வெளியிட்ட மியூசிக் ஆல்பம் இதோ.

0
625
raghuvaran
- Advertisement -

80ஸ் காலகட்டம் தொடங்கி தூக்கி காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரகுவரன் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.அதன் பின்னர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமானார் ரசகுவரன் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன், அதன் பின்னர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் இவருக்கு நன்றாக பொரிந்தியது.

-விளம்பரம்-

அதனால் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நைன்ட்டீஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக மிகவும் பிரபலமாக இருந்தார். தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமா,ர் கார்த்தி என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ரகுவரன். ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தார்.

- Advertisement -

ரகுவரன் – ரோகினி :

திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி வரன் என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். ரகுவரன் மற்றும் ரோகிணி பிரிந்த நான்கு வருடங்களில் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிர் பிரிந்தார்.

இளையராஜாவின் உதவியாளர் :

இவரது மரணத்திற்கு நடிகை ரோகிணி கூட வந்திருந்தார். நடிகர் தான் நடிகராக வேண்டும் என்று சினிமாவிற்கு வரவில்லை இவரது லட்சியமே ஒரு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்பது தான்.இதனால் இசைஞானி இளையராஜாவிடம் உதவியாளராக சில நாட்கள் பணிபுரிந்தார்.அதில் அவர் ஒரு சில படங்களில் கீயபோர்டும் வாசித்துள்ளார்.மேலும் நடிகர் ரகுவரன் தாமே 6 பாடல்களை இசையமைத்தார் அந்த ஆல்பத்திற்கு ரகுவரன்-மியூசிக்கல் ஜர்னி என்ற பெயர் வைத்து நடிகர் ரஜினியை வைத்து அந்த ஆல்பத்தை வெளியிட்டார்.

-விளம்பரம்-

அந்த ஆல்பங்களில் உள்ள பாடல்களின் பெயர்கள் கீழே.

1.i wanna see you

2. There is a bird

3.the fire

4.cancer pain

5.instrumental

ரகுவரன் அளித்த பேட்டி :

நடிகர் ரகுவரன் இறப்பதற்கு முன்பாக அதாவது 21/02/2007 அண்டு பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு. நினைவு மட்டும் நிஜம் போல நிக்குது. தனிமை சிலரை கெட்டவங்களாக மாத்தவிிடும். ஆனால், என்னை அழகா செதுக்கி வெச்சிருக்கு. துக்கத்தைத் தூக்கி உதற பழகிட்டேன். என் உலகத்தைச் சந்தோஷமாக மாற்ற வித்தையைக் கற்றுக்கொண்டேன். என் அப்பாவையும் அம்மாவையும் நினைத்து சட்டென்று கண்ணீர் வழிகிறது. எவ்வளவுோ வருடம் என்னை மாதிரி ஒரு நபரை நெஞ்சில் சுமந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கூடவே இருக்கேன். அப்புறம் என் பையன் ரிஷி. எப்போதும் எனக்கு அவன் ஞாபகம் தான். என் உலகத்தை அற்புதமாக்குகிறான் ரிஷி. அப்புறம், இருக்கவே இருக்கார் என்னை அன்பால் ஆசீர்வதி கொண்டே இருக்கும் சாய்பாபா என்று மிகவும் மனமுருக கனத்த இதயத்துடன் பேசி இருந்தார் ரகுவரன்.

Advertisement