மருமகன் தனுஷ் கேட்டும் வேண்டாம் என்று மறுத்த ரஜினி..! ஆசை நிறைவேறாத வருத்தத்தில் தனுஷ்

0
659
dhanush

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவையும் தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது தனது மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் “காலா” படத்தின் தயரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

dhanush actor

ஹாலிவுட் வரை சென்று நடித்துள்ள நடிகர் தனுஷுக்கு தமிழ் சினிமாவில் நிறைவேறாத ஆசையும் இருக்கிறதாம். அது வேறு ஒன்றும் இல்லை தனது மாமனாரான சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது தானாம்.

சமீபத்தில் காலா படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ் “சூப்பர் ஸ்டாரின் படத்தை தயாரித்தால் மட்டும் போதாது, அவருடைய படத்தில் ஒரு கதாபாத்திரத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை “சென்று தெரிவித்திருந்தார்.

kaala

மேலும் காலா படத்தில் நடிக்க ,நடிகர் தனுஷ் அந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். இயக்குனர் ரஞ்சித்தும் ரஜினியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் ரஜினி எதனால் தனுஷை நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்ற காரணத்தை சொல்லவில்லையாம். இதனால் “காலா ” படத்தில் நடிக்காமல் போனது தனுஷுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறதாம்.