அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளி வந்த “பிகில்” படம் திரையரங்களில் வேற லெவல்ல தூள் கிளப்பியது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும்,விஜய்யின் பிகில் படத்தில் “வெறித்தனம்” என்ற கானா பாடலை சூப்பர் சிங்கர் பூவையார் பாடி உள்ளார். மேலும், அடுத்ததாக விஜய் நடிக்கும் “தளபதி 64” படத்திலும் பூவையார் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளி வந்து உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் சூப்பர் ஹிட். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் சொல்லவா வேண்டும். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் வருடம் வருடம் சிறியவர்கள்,பெரியவர்கள் என தனி தனியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெறும். விஜய்யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எப்போதும் மாஸ் தான். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என அனைத்து தரப்பினருக்கும் மாபெரும் வாய்ப்பை அள்ளித் தந்து வருகிறது.
மேலும், ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இது அனைவருக்கும் தெரியும். மேலும், சிறுவர்களுக்காக நடந்த இந்த கடைசி சீசனில் பூவையாரு சிறுவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தவர் பூவையார். மேலும்,இவரை “கானா ராக்ஸ்டார்” என்று தான் அழைப்பார்கள். பூவையார் தற்போது திரைப் படங்களில் பாடுவதும், ஆடுவதும், நடிப்பதும் என பிஸியாக இருந்து வருகிறார். மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பூவையாருக்கு சினிமா உலகில் அதுவும் தளபதி விஜய் படத்திலேயே பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பிகில் படத்தில் விஜய் அவர்கள் தனது சொந்த குரலில் பாடிய “வெறித்தனம்” பாடலில் கானா பூவையாரும் பாடி, ஆடி உள்ளார்.
இதையும் பாருங்க : இதனால் தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். மனம் திறந்த மைனா.
மேலும்,பிகில் திரைப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் “தளபதி 64” படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனில் பூவையாரு கலந்து கொண்டு உள்ளார் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. மேலும், ஓகே ஆனால் அந்த படத்தில் நடிக்க இருப்பார் போல எனவும் தெரிய வந்தது. ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால்,பூவையாரு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்கள் நடிக்க இருக்கும் “விக்ரம் 58” திரைப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று மட்டும் தெரிய வந்து உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு அடுத்து ஒரு புதிய வாய்ப்பும் கிடைத்து உள்ளது. அதாவது சினிமாவில் இசை அமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல் ஓன்றில் பூவையாரு பாடி உள்ளார். மேலும்,இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த சின்ன வயதிலேயே சினிமாவில் உள்ள பல பிரபலங்களின் மத்தியில் இவ்ளோ!!! பெரிய வாய்ப்பா என்று ரசிகர்கள் பூவையாருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.