கலைஞரால மறுபடியும் கர்நாடகாவுக்கே ஓடிடலாம்னு நினைச்சேன் – ரஜினி எழுதிய கடிதம் இதோ.

0
1837
- Advertisement -

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினி அவர்கள் அவருடன் இருந்த பழைய நினைவுகளை கடிதம் மூலம் பகிர்ந்து இருக்கிறார். அந்த கடிதத்தில் ரஜினிகாந்த் எழுதியது, கருணாநிதியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்­த­கம். எஸ்.பி. முத்­து­ரா­மன், கருணாநிதியைப் பற்றி நிறைய விஷ­யங்­களை எனக்கு சொல்­லி­யி­ருக்­கி­றார்.

-விளம்பரம்-

ரஜினி எழுதிய கடிதம்:

எஸ்.பி.முத்­து­ரா­மனின் தந்தை ராம சுப்­பையா திரா­விட கட்­சி­யின் தீவிர விசு­வா­சி­யாக இருந்­த­வர். அண்ணா, கருணாநிதி மற்­றும் பல தலை­வர்­கள் செட்­டி­நாடு சென்­றால் ராம சுப்பையாவின் வீட்­டில் தான் தங்­கு­வார்­கள். அங்­கு­தான் பல ஆலோ­ச­னை­கள் மற்­றும் முக்­கிய முடி­வு­களை எடுப்­பார்­கள். எஸ்.பி.முத்து­ ராமன், கருணாநிதியைப் பற்றி சொல்ல சொல்ல அவர் மீது இருந்த மதிப்­பும், மரியாதையும் அதிகமானது. தமிழ் திரை உல­கின் இரண்டு ஜாம்­ப­வான்­க­ளான சிவாஜி கணே­சன் மற்­றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் புக­ழின் உச்சிக்குச் செல்ல முக்­கி­ய­மான கார­ண­மாக இருந்­த­வர் கருணாநிதி. அவர் எழு­திய “பரா­சக்தி” படத்­தின் அற்புதமான சமு­தாய சீர்­தி­ருத்­தும், புரட்­சி­க­ர­மான வச­னங்­களை உணர்ச்­சி­க­ர­மாக பேசி, நடித்து நடி­கர் தில­கம் சிவாஜி கணே­சன் ஒரே நாளில் உச்ச நட்­சத்­தி­ரம் ஆனார். எம்.ஜி.ஆர். நடித்த “மரு­த­நாட்டு இள­வ­ரசி, மந்­தி­ரி­குமாரி, மலைக்­கள்­ளன்” போன்ற படங்­க­ளுக்கு வச­னம் எழுதி அந்­தப் படங்­களை மிகப்­பெ­ரிய வெற்­றிப்­ப­டங்­க­ளாக்கி எம்.ஜி.ஆரை நட்­சத்­தி­ர­மாக மாற்­றி­னார்.

- Advertisement -

1977 ஆம் ஆண்டு என்­னு­டைய TMU 5004 பியட் காரை மியூ­சிக் அகா­டமி பக்­கம் ஓட்­டிக் கொண்­டி­ருந்­தேன். பின்னால் ஒரு வண்டி வந்­து­கொண்­டி­ருந்­தது. வண்­டி­யில் வந்­து­கொண்­டி­ருந்­த­வரை என் கார் கண்­ணாடி மூலம் உற்­றுப்­பார்த்­தேன். நன்கு தெரிந்த முகம். கண்­ணில் கருப்­புக்­கண்­ணாடி கருணாநிதி என்று தெரிந்­தது. நான் அப்படியே இடது பக்­க­மாக ஒதுங்கி வழி விட்­டேன். எனது காரை கடக்­கும் போது அவர் என்­னைப் பார்த்து அன்­புடன் சிரித்து கைகளை ஆட்­டி­னார். காரில் என்­னைப் பார்த்து அன்­பு­டன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்­கை­யில் மறக்க முடி­யா­தது. அது­தான் நான் கருணாநிதி அவர்களை முதன் முத­லில் பார்த்­தது. நான் 1980–ல் ஒரு திரைப்­ப­டத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மா­கி­யி­ருந்­தேன்.

அந்த திரைப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர் கருணாநிதியின் நண்­பர் மற்­றும் அவ­ருக்கு மிக­வும் நெருக்­க­மா­ன­வர். அந்­தத் திரைப்­ப­டத்­தின் வச­னங்­கள் தயாரிப்பாளருக்கு திருப்தி தரவில்லை. படம் ஆரம்­பிப்­ப­தற்கு சில நாட்­க­ளுக்கு முன்­னால் தயா­ரிப்­பா­ளர் என்­னிடம் வந்து “நான் உங்­க­ளுக்கு ஒரு மகிழ்ச்­சி­யான விஷ­யத்தை சொல்­கி­றேன்… நம் படத்­துக்கு வச­னம் எழுத கருணாநிதி ஒப்புக்கொண்டார்” என்று மிக­வும் மகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார். எனக்­குத் தூக்கி வாரிப் போட்­டது. எளி­மை­யான தமிழ் வச­னங்­களை பேசி நடிப்­ப­தற்கே திண்­டா­டிக் கொண்­டி­ருக்­கும் நான் கருணாநிதியின் வசனங்களை பேசி நடிப்­பதா ??? நடக்­காத காரி­யம்… இதற்கு நான் கர்­நா­ட­கா­விற்கே ஓடிப்­போய் மறு­ப­டி­யும் பேருந்­தில் டிக்­கெட் விற்க ஆரம்­பித்து விட­லாம். தயா­ரிப்­பா­ள­ரி­டம் முடி­யவே முடி­யாது என்று கூறி­னேன். இதைக் கேட்ட தயா­ரிப்­பா­ள­ருக்கு இடி விழுந்த மாறி ஆயிற்று.

-விளம்பரம்-

அவர் வச­னம் எழுத சம்­ம­தித்­ததே நமக்கு கிடைத்த பாக்கியம். அவர் வச­னம் எழு­தி­னால் நம் படம் மிகப்­பெ­ரிய வெற்றி அடை­யும். உங்­க­ளுக்கு சிர­ம­மாக இருந்தாலும் இதற்கு ஒப்­புக்­கொள்­ளுங்­கள் இல்­லை­யென்­றால் அவர் எழுத சம்­ம­தித்த பிற­கும் நீங்­கள் வேண்­டாம் என்று கூறி­யதை அவ­ரி­டம் நான் எப்­படி சொல்­வது என்று திண்­டா­டி­னார். நான் அவரை சந்­திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள், நானே அவ­ரி­டம் சொல்­கி­றேன் என்று கூறி­னேன். அவ­ரும் வேண்டா வெறுப்­பாக சரி என்று சொல்லி கருணாநிதியை சந்­திக்க ஒரு வாய்ப்பு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தார். கோபால­பு­ரத்­தில் உள்ள அவ­ரு­டைய இல்­லத்­திற்கு சென்­றேன். தமிழ் நாட்­டுக்கே தெரிந்த ல­க்ஷ­ன­மான வீடு. அவருடைய உத­வி­யா­ளர் சண்­மு­க­நா­தன், ஒரு­வர் மட்­டுமே செல்­லக்­கூ­டிய படிக்­கட்­டு­கள் மூலம் என்னை கருணாநிதி இருக்­கும் அறைக்­குள் அழைத்­துச் சென்­றார். 1977 ல் மியூ­சிக் அகா­டமி அரு­கில் பார்த்த அதே முகம். அதே புன்­னகை… வாங்க என்று அவ­ருக்கே சொந்­த­மான அந்த கர­க­ரப்­புக் குர­லில் என்னை அழைத்து நலம் விசாரித்தார். பின்பு “கதை­யைக் கேட்­டேன்… நன்­றாக இருக்­கி­றது. சிறப்­பாக வச­னங்­களை எழு­தி­ட­லாம்” என்­றார். நான் அவரை சார் என்று தான் அழைப்­பேன். “சார் உங்­கள் வச­னங்­களை நான் பேச முடி­யாது.

எளி­மை­யான தமிழை பேசவே நான் சிர­மப்­ப­டு­கி­றேன். அப்­படி இருக்­கும் போது உங்­கள் வச­னங்­களை எப்­படி நான் பேசு­வது? என்­னால் முடி­யாது. தவ­றாக நினைக்க வேண்­டாம்” என்று கூறி­னேன். அதற்கு அவர் சிரித்து “எனக்கு யாருக்கு எப்­படி எழு­த­வேண்­டும் என்று நன்­றா­கவே தெரி­யும். சிவா­ஜிக்கு எழு­து­வது போல எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்­டேன்… அதே போல எம்.ஜி.ஆருக்கு எழு­து­வ­தைப்­போல சிவா­ஜிக்கு எழு­த­மாட்­டேன். உங்­கள் படங்­களை நான் பார்த்­துள்­ளேன். உங்­கள் ஸ்டைலில் நான் எழு­து­கி­றேன்” என்று சர்வ சாதா­ர­ண­மாக கூறி­னார். எனக்கு என்ன சொல்­வ­தென்று புரி­ய­வில்லை. திடீ­ரென்று ஒரு யோசனை தோன்­றி­யது. அந்த யோசனை அந்த நொடி­யில் எனக்கு தோன்­றி­ய­தற்கு நீ கெட்­டிக்­கா­ரன்டா என்று நானே மகிழ்ந்து “சார் படப்­பி­டிப்­பில் நாங்­கள் சில வச­னங்­களை மாத்­து­வோம் சில வச­னங்­களை நீக்­கு­வோம். அப்­படி இருக்­கும் போது உங்­கள் வச­னங்­களை மாத்­த­வும் முடி­யாது நீக்­க­வும் முடி­யாது. அது சரி­யா­ன­தா­க­வும் இருக்­காது” என்று கூறி­னேன்.

அதற்கு அவர் “மாற்­றுங்­கள்.. ஒன்­றும் தவ­றில்லை, அது என்ன திருக்­கு­றளா?’’ என்று கூறி­னார். அவர் அப்­படி சொல்­லு­வார் என்று நான் எதிர்­பார்க்­க­வில்லை. என்­னு­டைய கெட்­டிக்­கா­ரத்­த­ன­மெல்­லாம் நொடி­யில் சாம்­பல் ஆகி விட்­டது. எனக்கு ஒன்­றும் புரி­யா­மல் அமை­தி­யாக இருந்­தேன். இதை கவ­னித்த கருணாநிதி சிரித்­துக்­கொண்டே “முன்­னால் யார் வச­னங்­களை எழு­தி­னாரோ அவரே எழு­தட்­டும்… நான் தவ­றாக நினைத்­துக்­கொள்ள மாட்­டேன்… நீங்­கள் கவ­லைப்­பட வேண்­டாம்…” என்று கூறி தன் உத­வி­யா­ள­ரி­டம் தயா­ரிப்­பா­ளரை அழைக்­கும் படி கூறி­னார். தயா­ரிப்­பா­ள­ரி­டம் “என்­னு­டைய வச­னங்­களை பேசு­வ­தற்கு தனக்கு கஷ்­ட­மாக இருக்­கும் என்று ரஜினி கூறு­கி­றார். நான் அவ­ரு­டைய பாணி­யி­லேயே எழு­தித் தரு­கி­றேன் என்று சொன்­னேன். அவ­ரும் சம்­ம­தித்­தார். ஆனால் இந்த மாதம் 10ஆம் தேதி படப்­பி­டிப்பு என்று ரஜினி கூறு­கி­றாரே… நான் அடுத்த மாதம் என்று தானே நினைத்­துக் கொண்­டி­ருந்­தேன்… காலம் மிக­வும் கம்­மி­யாக இருக்­கின்­றது.

எனக்கு ஏற்­க­னவே முன் நிர்­ண­யிக்­கப்­பட்ட வேலைகள் நிறைய இருக்­கின்­றன. ஆகை­யால் இந்­தப் படத்­திற்கு என்­னால் வச­னங்­கள் எழுத முடி­யாது. அடுத்த படத்­தில் பார்த்­துக் ­கொள்­ள­லாம்” என்று கூறி தயா­ரிப்­பா­ளரை அனுப்பி வைத்­தார். பிறகு என்­னைப் பார்த்து “என்ன ரஜினி இப்போ உங்­க­ளுக்கு திருப்­தியா?” என்று கேட்­டார். தயா­ரிப்­பா­ள­ரின் மன­தை­யும் துன்­பு­றுத்­தா­மல், என்­னை­யும் திருப்­தி­ப­டுத்­திய அவ­ரு­டைய செய்­கை­யால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்­பும், மரி­யா­தை­யும் பல மடங்கு உயர்ந்­தது. ஆனா­லும், அவ­ரு­டைய வச­னங்­களை பேசி நடித்­தி­ருக்­க­லாமோ? தவறு செய்து விட்­டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்­றும் எனக்­குள் இருந்து கொண்டே இருக்­கின்­றது. பல நேரங்­க­ளில் நான் அவ­ரு­டன் நெருங்­கிப் பழகி இருக்­கி­றேன். அவர் எந்த ஒரு விஷ­யத்­திற்­கும் நான் அவரை கவ­னித்­துப் பார்த்­த­தில் எந்த ஒரு முடி­வை­யும் எடுத்­தோமா கவிழ்த்­தோமா என்று எடுக்­க­மாட்­டார்.

அதற்கு சம்­மந்­தப்­பட்­ட­வர்­க­ளின் பல பேரு­டன் விசா­ரித்து, பேசி, விவா­தித்­து­ தான் எந்த ஒரு முடி­வை­யும் எடுப்­பார். அப்­படி இருக்­கும் போது எம்.ஜி.ஆர் அவர்­களை கட்­சி­யில் இருந்து நீக்­கும் முக்­கி­ய­மான முடிவை நிச்­ச­யம் பல பேரின் ஆலோ­ச­னை­களை கேட்­டு­தான் எடுத்­தி­ருப்­பார். எனக்கு தெரிந்த ஒரு­வர். அவர் பெயர் கூற இய­லாது. அவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து “இதை யாரி­ட­மும் கொடுக்க வேண்­டாம். நீங்­கள் மட்­டும் கேட்டு பிறகு என்­னி­டமே திருப்­பிக்­கொ­டுத்து விடுங்­கள்” என்று கூறி­னார். அது 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்­சியை விட்டு நீக்­கப்­பட்ட பிறகு அவருக்­கும் எஸ்.எஸ். ராஜேந்­தி­ரனுக்கும் நடந்த தொலைப்­பேசி உரை­யா­டல் ஆகும். அதில் எஸ்.எஸ்.ஆர். அவர்­கள் “அண்ணே… ஏதோ கெட்ட நேரம் அவ­சர அவ­ச­ர­மாக என்­னென்­னமோ நடந்து விட்­டது. வருங்­கா­லத்­தில் கழ­கத்­திற்கு இத­னால் பெரிய இழப்பு ஏற்­ப­டும். வேறு யாரும் இல்­லா­மல் நீங்­கள் இரு­வர் மட்­டும் ஒரு பொது இடத்­தில் சந்­தித்து மனம் விட்டுப்பேசினால் எல்­லாம் சரி ஆகி­டும். கருணாநிதியிடம் நான் பேசு­கி­றேன்.

எனக்­காக இதை செய்­யுங்­கள்” என்று கூறு­வார். அதற்கு எம்.ஜி.ஆர். “இல்லை தம்பி.. என்­னு­டைய விசு­வா­சி­கள் எனக்கு ஆத­ர­வாக போராட்­டங்­கள் செய்து என்­னு­டைய அபி­மா­னி­கள் என்று அடை­யா­ளம் காட்­டிக் கொண்டு விட்­டார்­கள். நான் திரும்பி கட்­சி­யில் சேர்ந்­தால் என்­னு­டைய அபி­மா­னி­களை கட்­சி­யில் உள்­ள­வர்­கள் முந்­தைய மாதி­ரிப் பார்க்க மாட்­டார்­கள். அவர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வார்­கள் அவர்­கள் எல்­லாம் உதி­ரிப்­பூக்­கள் ஆகி­வி­டு­வார்­கள். அவர்­க­ளுக்­கா­கவே நான் தனிக்­கட்சி ஆரம்­பிக்க வேண்­டும். எனக்கு வேறு வழி­யில்லை. தப்­பாக நினைத்­துக் ­கொள்­ளாதே” என்று அந்த உரை­யா­டல் முடிந்­தி­ருக்­கும். அதன் பின் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்­சியை உரு­வாக்­கி­னார். அதன் பின் யார் யார் எம்.ஜி.ஆர். கட்­சியை விட்டு நீக்க வேண்­டும் என்று சொன்­னார்­களோ.. அதில் பல பேர் ஒவ்­வொ­ரு­வ­ராக கட்­சி­யி­லி­ருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்­கம் போனார்­கள். அத­னால் கருணாநிதியின் இத­யம் எவ்­வ­ளவு வேத­னை­யில் துடித்­தி­ருக்­கும்?

எதை­யும் தாங்­கும் இத­யம் என்று அண்ணா இவரை நினைத்து தான் சொன்­னாரோ? எவ்­வ­ளவு வேத­னை­கள், சங்­க­டங்­கள், ஏமாற்­றங்­கள், துரோ­கங்­கள் என அத்­த­னை­யும் தாண்டி தொண்­டர்­க­ளுக்கு அவர் எழு­திய ஆயி­ரக்­க­ணக்­கான கடி­தங்­கள், கட்­டு­ரை­கள், சினி­மா­வில் எழு­திய வச­னங்­கள், அவர் செய்த சுற்­றுப்­ப­ய­ணங்­கள், மேடைப்­பேச்­சு­கள், 13 ஆண்­டு­கள் ஆட்­சி­யில் இல்லை என்­றா­லும் கட்­டுக் கோப்­பாக, ஒரு தனி ஆளாக கட்­சியை வழி நடத்தி மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தார் என்­றால் அது ஒரு மாபெ­ரும் புரட்சி. அவ­ரைப்­பற்றி எழு­தி­னால் எழு­திக்­கொண்டே போக­லாம். அவ­ரு­டைய இந்த நூற்­றாண்­டில் அவரை நினைத்து, அவ­ரு­டன் நான் கழித்த எத்­த­னையோ தரு­ணங்­களை ஞாப­கப்­ப­டுத்தி, அவர் வாழ்ந்த அதே காலத்­தில் நானும் வாழ்­கி­றேன், அவ­ரு­டைய இத­யத்­தில் எனக்­கென்று ஒரு தனி இடம் இருந்­தது. அத­னால்­தான் எந்த ஒரு விழா­வி­லும் என்னை அவர் அரு­கில் அமர வைத்து மகிழ்­வார் என்­பதை நினைக்­கும் பொழுது எனக்கு மிக­வும் பெரு­மை­யாக இருக்கின்றது என்று கூறி இருக்கிறார்.

Advertisement