முதன் முறையாக காவிரி பிரச்சனை பற்றி வாய் திறந்த ரஜினி ! என்ன சொன்னார் தெரியுமா

0
3547
Actor rajinikanth
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்களது அரசியல் நடவடிக்கைகளை மும்மரப்படுத்தி வருகின்றனர்.கடந்த டிசம்பர் மாதம் தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினி தனது கட்சிக்கான மாவட்ட,நகர மற்றும் நகர செயலாளர்களை ஏற்கன்வே அறிவித்து விட்டார்.மேலும் தனது அரசியல் பணிகளுக்கான பிரச்சாரத்தையும் ரஜினி ஏற்கன்வே தொடங்கிவிட்டார் என்ரே கூறலாம். அதற்கு உதாரணமாக இன்று வெளியான காவிரி நீர் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

நீண்ட நாட்களாக கர்நாடக மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான காவிரி நீர் பிரச்னைக்கு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஓன்றை அளித்தது.அதன்படி 177. 25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்துள்ளது. தற்போதை தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்.இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ரஜினி. உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இந்த தீர்ப்பு தமிழக விவசயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த செயலுக்கு அனைவரும் சப்போர்ட் செய்து வருகின்றனர். என்னதான் அவர் கர்நாடகாவில் பிறந்தாளும் தமிழ்நாட்டிற்காக அவர் என்றும் துணை நிற்பார் என்று ரஜினியின் ரசிகர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement