தமிழ் சினிமாவில் பல காலங்களாக நடித்து வரும் அனைவரும் பெரிய நடிகர்களாக ஆவதில்லை. நூற்றில் சிலர் மட்டும்தான் ரசிகர்களிடையே பிரபலமடைகின்றனர். அப்படி 250 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரம், குனச்சித்திரம், காமெடி, வில்லன் என பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ரவி தற்போது பலருக்கும் தெரியாத நடிகராகவே இருந்து வருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கை சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அவர் அந்த பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட பல நிகழ்வுகளை கூறியிருந்தார்.
அவர் அந்த பேட்டியில் கூறியதாவது `நான் குழந்தை நட்சத்திரமாக 6 வயது இருக்கும் போதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். “மங்கம்மா சபதம்” என்ற திரைப்படத்தில் குழந்தை கமலுடன் சண்டை போடும் காட்சியின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகினேன். அதற்கு பிறகு நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு தம்பி, நடிகை பானுபிரியா அவர்களுக்கு தம்பி என பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தேன். அதற்கு பிறகு 16 வயதில் முதல் முறையாக அப்போதய பிரபல நடிகர் பிரசாந்துடன் இணைந்து “வைகாசி பொறந்தாச்சு” என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாபத்திரத்தில் நடித்திருந்தேன்.
அதற்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் வந்தது ஆனால் என்னுடை அலட்சியத்தால் அதை தவற விட்டுவிட்டேன், அதற்கு பிறகுதான் தெரிகிறது சினிமா என்றால் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று. பின்னர் தெரிந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரிடம் வாய்ப்புகளை தேடிச் சென்றேன். சினிமாவில் நடிப்பவர்களுக்கு அபோதெல்லாம் அவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வராது. நான் “வைகாசி பொறந்தாச்சு” படத்தில் நடித்தற்க்கே மாதம் 1000 ருபாய் சம்பளமாக கிடைத்தது. அதோடு நான் நன்றாக நடிக்கிறேன் என்று 250 ருபாய் அதிகமாக கொடுத்தார்கள். அதுவே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நான் 9ஆம் வகுப்பு வரையில் தான் படித்திருக்கிறேன் எனவே கிடைக்கிற சம்பளத்தை வைத்துதான் வாழ்க்கை ஓடும்படியாக இருந்தது. ஆனால் முன்னணி நடிகர்களான பிரசாந்த், விஜய் அவர்களுடன் “லவ் டுடே”, முரளி அவர்களுடன் “காலமெல்லாம் காதல் வாழ்க”, அஜித் அவர்களுடன் வான்மதி, ரெட் என பல திரைப்படங்களில் நடித்திருந்தேன். சிறிய படமாக இருந்தாலும் சரி, பெரியப்படமாக இருந்தாலும் சரி கதையோடு போகும் நன்றாக பேசப்படும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்.
மறைந்த நடிகர் விவேக் அவர்கள் என்னுடை அண்ணன் போன்றவர், அவர்தான் திருட்டுப்பலயே, ரன், ரெட் என பல திரைப்படங்களில் நான் நடிக்க எனக்கு பரிந்துரை செய்தார். விவேக் அவர்கள் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு கூட சம வாய்ப்பு கொடுப்பர். அவர் மறைந்தது நாட்டிற்கு பெரிய இழப்பு, அதோடு எனக்கு அது ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஆரம்பத்தில் நான் காமெடியனாகத்தான் அறிமுகமாகினேன் ஆனால் என்னுடன் அப்போது நடித்த நடிகர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை ஆனால் நான் இன்னமும் நடித்துக் கொட்டிருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
சினிமாவில் அவமானப் படாதவர்கள் என்று யாருமே இல்லை உதாரணமாக நான் கூட பல இடங்களில் அவமானப்பட்டிருக்கிறேன். நான் சிறு வயதில் திரைப்படத்தில் நடித்திருக்கும் போது சாப்பிடுவதற்கு மீன் வந்தது நான் ஒன்றை சாப்பிட்டு விட்டு மீண்டும் மற்றொரு மீனை எடுத்துக் கொண்டேன் இதனை பார்த்த ப்ரொடெக்ஷன் ஆர்ட்டிஸ்ட் திட்டி விட்டார். அது எனக்கு எல்லோருக்கும் மத்தியில் பெரிய அவமானமாக இருந்து நான் சாப்பிடும் தட்டை வைத்து விட்டு கைகழுவி அழுது கொண்டே சென்று விட்டேன். நடுவயதான பிறகு கூட முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து நன்பர்களாக நடிக்கும் போது ஒன்றாக அமர்ந்து சாப்பிட செல்வோம் ஆனால் என்னை இங்கே சாப்பிட கூடாது என்று சொல்வார்கள் அது கொஞ்சம் மனதிற்க்கு கடினமாக இருந்தது.
கடந்தகால சினிமாவில் படப்பிடிப்பிற்கு பிலிம் ரோல்கள் தான் எனவே நன்றாக நடிக்க தெரிந்த நடிகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருந்தது, ஆனால் இப்போது டிஜிட்டல் என்பதினால் பணத்தை கொடுத்து நடிக்க வருகிறார்கள். இத்தனை நாட்களாக சினிமாவில் இருந்ததில் எனக்கு தெரியவந்தது படிப்பு மிக முக்கியம் என்று. ஏனென்றால் கடந்த கொரோனா காலத்தில் படித்தவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி கொண்டனர், ஆனால் என்னை போல சில நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
ஆனால் என்ன கடினமாக சாப்பாட்டிற்கே முடியாமல் இருந்தாலும் சினிமா நடிகர்கள் வெளியில் வரும் போது நன்றாக உடை அணிந்து கொண்டுதான் வருவார்கள். இதனை பார்ப்பவர்கள் `ஒ சினிமா சுலம்பம் போல நாமும் நடிக்கலாம் என்று கல்வி கற்ப்பதில் இருந்து வந்து விடுகிறார்கள். உதாரணமாக வடபழனி தம்பரம் பகுதிகளில் தினமும் 1000 பேர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைவது, பணத்தை கொடுத்து ஏமாறுவது என இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
முன்னரெல்லாம் விஜய், அஜித், பிரசாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் அப்போது நாங்கள் நண்பர்கள் போல பழகி வருவோம். நடிகர் அஜித் அவர்களுடன் “வான்மதி” திரைப்படத்தில் நெருங்கி நண்பர்களாக பழகி வந்தேன். ஆனால் ரெட், தினா போன்ற படங்களில் அவரை நெருங்க கூட முடியவில்லை, அஜித் நல்லவர் தான் ஆனால் அவருடன் இருக்கிறார்களே அவர்கள்தான் என்னமோ நாம் அவரை கடித்து தின்று விடுவதை போல நடந்து கொள்கிறார்கள். அதனால் நானும் நடிகர் அஜித் அவர்களை பார்த்தால் வணக்கம் என்பதோடு இருந்து விடுகிறேன்.
தற்போது நான் பெரிய படங்களில் நடிப்பதில்லை சிறிய படங்களில் நடித்து வருகிறேன். சிறிய படங்களை மிகவும் போராடி எடுக்கிறார்கள் ஆனால் படத்தினை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் கோட்டை விடுகிறார்கள். நான் எந்த படமாக இருந்தாலும் சரி நல்ல படமாக இருந்தால் நடித்து வருகிறேன். சினிமாவில் திறமையோடு அதிர்ஷ்டமும் வேண்டும் நான் சினிமாவை நம்புகிறேன். என்ன தான் நான் சிறுவயதில் இருந்து பல வேலைகள் செய்தாலும் சினிமாவில் சென்று கேமிரா முன்னர் நடிக்கும் போது கிடைக்கின்ற ஆத்மதிருப்தி எவற்றிலும் கிடைக்காது என்று அந்த பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான நிகழ்விகளை பகிர்ந்து கொண்டார் நடிகர் ரவி.