அட கொடுமையே, கொரோனா பாதிப்பால் கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்.

0
5628
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் கடந்த சில மாதங்களாகவே மக்களின் இயல்பு வாழ்க்கையும், பல தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சினிமா தொழிலாளர்கள் முதல் சாதாரண அடித்தட்டு மக்கள் வரை என பலரும் தத்தளித்து தவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
வேலை இல்லாததால் கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர் | marathi actor rohan pednekar sells dried fish because of lockdown

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனை செய்வதில் இறங்கியுள்ளார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மராத்தியில் பிரபலமான நடிகராக திகழ்பவர் ரோஹன் பெட்னேக்கர். இவர் மராத்தியில் சூப்பர் ஹிட் அடித்த பாபாசாகேப் அம்பேத்கர் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அனைத்தும் விதமான ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதால் இவர் கருவாடு விற்பனையில் இறங்கியுள்ளார். இது குறித்து நடிகர் ரோஹன் பெட்னேக்கர் அவர்கள் கூறியது, மீண்டும் எப்போது நடிக்கும் வேலை வரும் என தெரியவில்லை. என் அப்பா இந்த கருவாடு வேலையை செய்தார். அதனால் எனக்கு இதில் கொஞ்சம் புரிதல் இருக்கிறது.

Pednekar

இந்த வேலையை செய்வதில் எனக்கு எந்த உஒரு அவமானமும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், இந்த கொரோனா சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என யாரையும் விட்டு வைக்கவில்லை. கொரோனாவால் பல பிரபலங்கள் உயிர் இழந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement