சித்தி முதல் ரோஜா வரை பல சீரியல்களில் நடித்த நடிகர் வீட்டில் நேர்ந்த இறப்பு – சோகத்தில் குடும்பத்தனர்.

0
2196
- Advertisement -

மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான லலிதாம்பாள் இறந்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் வாசு விக்ரம். இவர் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் பேரனும், மறைந்த நடிகர் எம்.ஆர்.வாசுவின் மகனும் ஆவார். அதோடு நடிகை ராதிகா அவர்கள் இவருக்கு சித்தி முறை என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இப்படி நடிப்பு என்றால் வாசு விக்ரமின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை நடித்து கொண்டு வருகிறார். மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாலைவனத்தில் பட்டாம்பூச்சி’ என்கிற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நீங்களும் ஹீரோதான், பரதன், மஞ்சு விரட்டு, சிவாஜி, எங்கள் ஆசான் போன்ற பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும், காமெடியனாகவும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

வாசு விக்ரம் நடித்த சீரியல்கள்:

இவர் இதுவரை சுமார் 50-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். பின் சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார். இவர் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரில் தான் நடித்தார். முதல் தொடரிலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இவர் செல்வி, செல்லமே, முடிவில்லா ஆரம்பம், சின்ன பாப்பா பெரிய பாப்பா, விதை, அழகு, சரவணன் மீனாட்சி போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து இருக்கிறார்.

வாசு விக்ரமின் தாயார் மறைவு:

இந்நிலையில் நடிகர் வாசு விக்ரமின் தாயார் லலிதாம்பாள் இறந்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதாவது, மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர் வாசுவின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான லலிதாம்பாள் சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவஸ்தை பட்டு வந்து இருந்தார். பின் இவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்து இருக்கிறார். தற்போது இவருக்கு 83 வயது ஆகிறது. இவரின் உடல், கோடம்பாக்கம் ஆ.என்.நம்பியார் தெருவிலுள்ள வாசுவின் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், திங்கள் கிழமை மாலை 2 மணிக்கு ஏவி.எம் சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பலரும் லலிதாம்பாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இது குறித்து அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பதிவு:

அதில் “நடிகர் திரு. MRR வாசு அவர்களின் மனைவியும், நடிகர் வாசு விக்ரம் அவர்களின் தாயாருமான திருமதி. லலிதாம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார். இவரை அடுத்து திரைபிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement