சந்தானம் நடித்த ஹிந்தி படம் பற்றி தெரியுமா ? அவரது அலுவலகத்தில் இருக்கும் புகைப்படம் இதோ.

0
2869
santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். சந்தானத்தின் நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் எப்போதும் பஞ்சமே கிடையாது. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 , ஏ1 போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது. சமீபத்தில் சந்தானம் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த டகால்டி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் சந்தானம் அவர்கள் முதன் முதலாக நடித்த இந்திப் படத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகர் சந்தானம் அவர்கள் முதன் முதலாக ஹிந்தியில் சின்னு மன்னு என்ற படத்தில் நடித்தார். இதில் அவர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலஹாசன் அப்பு கெட்டப் போட்டிருந்தார்.

- Advertisement -

அந்த கெட்டப்பில் நடிகர் சந்தானம் இருக்கும் புகைப்படம் தற்போது அவர் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவரது அலுவலகத்தில் வைத்துள்ளார். ஆனால், அந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இவர் அப்பு கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் மட்டும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடிகர் சந்தானம் அவர்கள் மூன்று கெட்டப்பில் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு இந்த படத்தில் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் சந்தானத்தோடு இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அனகா, ஷிரின், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவி, என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தியது.

-விளம்பரம்-
Advertisement