வரண் பார்த்துக்கொண்டு இருகாங்க. திருமணம் எப்போது என்று அறிவித்த சித்ரா.

0
1360
mullai
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை சித்ரா. நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். சித்ரா முதன் முதலில் விஜேவாக தான் தன் பயணத்தை தொடங்கினார். பின் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக மாறினார். சித்ரா முதன் முதலாக மக்கள் டிவியில் தான் தொகுப்பாளினியாக ஆனார்.

-விளம்பரம்-
chitra

பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் நடிகை சித்ராவும் ஒருவர்.

- Advertisement -

இவர் எப்போது சமூக வளைத்ததில் லைவ் சாட்டில் வந்தாலும் இவரிடம் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்வி, நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என்ற கேள்வி தான். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டு இருக்கும் போது ரசிகர் ஒருவர் இதே கேள்வியை கேட்டிருந்தார்.

View this post on Instagram

?❤️?

A post shared by Chithu Vj (@chithuvj) on

அதற்கு பதில் அளித்த சித்ரா, 2 ஆண்டுகளாகும். வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். யாரையாவது காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, இந்த முகத்துக்கெல்லாம் யார் கிடைப்பா என்று ஜாலியாக கூறியுள்ளார் சித்ரா.

-விளம்பரம்-
Advertisement