தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் சசிகுமார் நடித்த நந்தன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.
சசிகுமார் குறித்த தகவல்:
இந்த படங்கள் சசிகுமாருக்கு ஒரு நல்ல பெயரையும் வாங்கி தந்திருக்கிறது என்றே சொல்லலாம். அதன் பின் அதன் பின் சசிகுமார் நடித்த ப்ரீடம் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது சசிகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மை லார்ட். இந்த படத்தை இயக்குனர் ராஜூ முருகன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சைத்ரா அச்சர், குரு சோமசுந்தரம், ஆசா சரத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

சசிகுமார் பேட்டி:
இந்த படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் சசிகுமார் சம்பளம் உயர்வு பற்றி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், அயோத்தி, டூரிஸ்ட் பேமிலி படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்த போது பலருமே ஏன் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று கேட்டார்கள்.
http://youtube.com/shorts/EFs38WDbNxM
சம்பளம் பற்றி சொன்னது:
நல்ல கன்டென்ட் உள்ள படம் ஓடுகிறது என்று எல்லோருமே சம்பளத்தை கூட்டினால் நடிகர்களுடைய சம்பளமும் தான் கூடும். படத்தோட பட்ஜெட் குறைந்து விடும். அதுவே நான் சம்பளத்தை குறைத்தால் அந்த பணத்தை படத்துக்காக போடலாம். படம் நன்றாக வரும். அதை எல்லாம் தாண்டி நானும் தயாரிப்பாளராக இருந்தவன். இரண்டு படம் ஓடினதும் இரண்டு கோடி அதிகமாக கொடுங்கன்னு நான் கேட்க மாட்டேன். எனக்கு குறைவான சம்பளமே போதும் என்று கூறியிருக்கிறார்.






