தந்தை திட்டியதால் 13 வயதில் வீட்டை விட்டு ஓட்டம், மீண்டும் அழைத்தும் ஊருக்கு செல்லாமல் 14 ஆண்டுகள் கழித்து கெத்தாக சொந்த ஊர் சென்ற செந்தில்.

0
626
Senthil
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எவர் கிரீன் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை பார்ட்னர்ஸ் என்று கேட்டாலே சின்ன குழந்தை கூட கவுண்டமணி– செந்தில் என்று தான் சொல்லும். மேலும், காமெடி என்றால் முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவதும் தான் கவுண்டமணி– செந்தில் காம்போ தான்.இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று செந்தில் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

-விளம்பரம்-

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் இலஞ்செம்பூர் என்ற கிராமம் தான் செந்திலின் பூர்வீக ஊர். இவரது தந்தை ராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல். இவரது இயற்பெயர் முனுசாமி. இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை திட்டியக் காரணத்தால் தனது 13 ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார்.

- Advertisement -

முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. 1979 ஆம் ஆண்டு “ஒரு கோவில் இரு தீபங்கள்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் செந்தில்.

அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக அவர் பெயர் இடம்பெற்றது 1980-ல் வெளிவந்த மலையாளப் படமான இத்திக்கார பக்கி திரைப்படத்தில். பிரேம் நசீர் இதில் நாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து கவுண்டமணி அவர்களுடன் முதல் முதலாக இணைந்து நகைச்சுவையில் செந்தில் அசத்திய திரைப்படம் வைதேகி காத்திருந்தாள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு பின்னர் கவுண்டமணி செந்தில் கம்போவில் வந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதுவரை கவுண்டமணி – செந்தில் இருவரும் சுமார் 100 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளார்கள். செந்தில் வீட்டை விட்டு ஓடி வந்த பின் சில ஆண்டுகள் கழித்து இவர் படும் கஷ்டத்தை அறிந்து இவரது பெற்றோர்கள் மீண்டும் இவரை சொந்த ஊருக்கே வந்துவிடும்படி கூறியுள்ளனர்.

ஆனால், செந்தில் அப்போது சொந்த ஊர் திரும்பாமல் சென்னையிலேயே இருந்துள்ளார். அதன் பின்னர் தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவர் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மணிகண்ட பிரபு ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement