சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் சாம் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் சாக்லேட் பாய் வரிசைகளில் இடம்பிடித்த நடிகர் ஷாம். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த படத்திற்கு முன்னதாகவே இவர் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் விஜய்யின் நண்பராக ஒரு சில காட்சிகளில் தலை காண்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 12பி படத்திற்கு பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். பின் இடையில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு படங்களில் நடிப்பதற்கு அதிக கவனம் செலுத்தி வந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். அதன் பின் விஜய்யின் “வாரிசு” படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல விமர்சங்களை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
ஷாம் திரைப்பயணம்:
தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஷாம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அஸ்திரம். இந்த படம் மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.இ ந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நிரஞ்சனி, நிழல்கள் ரவி, ஷங்கர், ஜீவா ரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருந்தது. அதில் கலந்து கொண்ட ஷாம், நல்ல இயக்குனரோடு நல்ல கதையில் நடித்திருக்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது.

ஷாம் நடிக்கும் படம்:
அஸ்திரம் படம் என்னோட அடுத்த கட்ட கேரியருக்கு பிரமாஸ்திரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது மார்ச் 7-ம் தேதி தெரிந்துவிடும். கேரியர் தொடங்கும் போது நடிகராகனும் என்று வந்தேன். அந்த நேரத்தில் ஜீவா சார். 12b படத்தோட வாய்ப்பை கொடுத்தார். அப்போ எனக்கு வேறு எந்த அனுபவும் இல்லை. சில தவறுகள் நடந்தது. ஆனால், அதை நெகட்டிவாக எடுத்துக்கொண்டு சோர்வடைகிற ஆள் கிடையாது. வாரிசு படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.
ஷாம் பேட்டி:
எல்லோருக்கும் சினிமாவில் நேரமும் வெற்றியும் அமையனும். மூன்று வருடம் முயற்சி பண்ணினேன். அதற்குப்பிறகு எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இன்றைக்கு இருக்கிற பலர் சினிமா பயணத்தோட தொடக்கத்தில் பட கஷ்டங்களை எல்லாம் சந்தித்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டு சிவகார்த்திகேயனை சொல்லலாம். தொலைக்காட்சியில் கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு தான் அவர் இன்றைக்கு இந்த இடத்தில் இருக்கிறார். என்னோட கேரியர் தொடக்கத்தில் எனக்கு வழிகாட்டி இல்லை. நான் இதை குறையாக சொல்ல முடியாது. அதெல்லாம் தெரிந்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன். சிவகார்த்திகேயன் போட்டியாளராக இருந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருந்திருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=EaEFJMv-zvA
சிவகார்த்திகேயன் பற்றி சொன்னது:
அந்த நேரத்தில் நான் அவரிடம், உன்னோட காமெடி சென்ஸ் நல்லா இருக்கு. குழந்தைகளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி இருக்கேன். சிவகார்த்திகேயன் வளர்ச்சி பலருக்குமே ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அன்னைக்கு நானே அதை கவனித்தேன். நான் குஷி திரைப்படத்தில் விஜய் அண்ணனோட ஒரு சீன் நடித்த பிறகு மூன்று வருடத்தில் நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தேன். அதே மாதிரி தான் இன்று சிவகார்த்திகேயனும் இருக்கிறார். இதை ஒப்பிட்டு பார்க்காமல் சந்தோஷமாக முழு நிறைவோடு படங்கள் பண்ணனும். வாழ்க்கையில் எல்லோருக்கும் போராட்டங்கள் இருக்கும். எனக்கும் அது இருந்தது. அதை நேர்மையாக எடுத்துக்கொண்டு கடந்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.






