சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் ஷாம் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் சாக்லேட் பாய் வரிசைகளில் இடம்பிடித்த நடிகர் ஷாம். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். 12பி படத்திற்கு முன்னதாகவே இவர் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் விஜய்யின் நண்பராக ஒரு சில காட்சிகளில் தலை காண்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் 12பி படத்திற்கு பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். பின் இடையில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.
ஷாம் திரைப்பயணம்:
அதன் பின் விஜய்யின் “வாரிசு” படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் ஷாம் நடித்து இருந்தார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல விமர்சங்களை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஷாம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அஸ்திரம். இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் என்பவர் இயக்கி இருக்கிறார்.

ஷாம் பேட்டி:
இந்த படத்தில் நிரஞ்சனி, நிழல்கள் ரவி, ஷங்கர், ஜீவா ரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மார்ச் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சாம், சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இன்னும் மேல மேல வளரலாம். அவர் சம்பளம் 100 கோடி கூட வாங்கலாம். ஆனால், அவர் ஒருபோதும் தளபதி விஜய் இடத்தை அடைய முடியாது. விஜய் அண்ணா இடத்தை யாராலையுமே பிடிக்க முடியாது.

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மத்தியில் சிவகார்த்திகேயனுக்கு வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதற்காக இவர் அடுத்த தளபதி ஆகிவிட முடியாது என்று கூறியிருக்கிறார். இப்படி நடிகர் ஷாம் கூறியதற்கு காரணம், விஜய் அரசியலுக்கு செல்கிறார் என்று அறிவித்ததில் இருந்தே தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்று கூறுகிறார்கள். அதற்கு ஏற்ப சிவகார்த்திகேயன் படங்களும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் தகவல்:
இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமும் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த அமரன் படமும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது. இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பராசக்தி, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் என அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதுமட்டுமில்லாமல் கோட் படத்தில் விஜய் அவர்கள் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்திருப்பார். இது எல்லாம் வைத்து தான் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் என்று கூறி இருக்கிறார்கள்.






