இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.
தெலுங்கை போல இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் கூடினர். 2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதை அடுத்து, ரஷ்மிக்காவை கூகிள் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது. அதிலும், நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்று டைப் செய்தால், நடிகை ராஷ்மிகா பெயர் இடம்பெறுகிறது. அவர் பிரபலமான ஹீரோயின்களை முந்தி, இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் ராஷ்மிகாவின் National Crush பட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஆம், தற்போது நிதி அகர்வாலை அவரது ரசிகர்கள் National Crush என்று ட்ரெண்டு செய்து வருகின்றனர். தமிழில் பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களில் நடித்த நடிகை நீது அகர்வால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதைத்தொடர்ந்து இவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அதுபோக நேஷனல் நிதி என்ற ஹேஸ்டேக் ஐயும் போட்டு நிதி அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இதனால் ஏற்கனவே இந்த படத்திற்கு சொந்தம் கொண்டாடி வந்த நடிகை ராஷ்மிகா வந்த நாவிற்கு கொஞ்சம் பங்கம் ஏற்பட்டு இருக்கிறது தற்போது ராஷ்மிகா விற்கு இணையாக நிதி அகர்வாலுக்கும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.