உங்கள புத்திசாலின்னு நினைச்சேன் விஜய் சேதுபதி – விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் சாந்தனு

0
273
- Advertisement -

விஜய் சேதுபதியை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து நடிகர் சாந்தனு போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனுவும் ஒருவர். இவரது தந்தை பாக்கியராஜால் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். தற்போது பிரபலமான நடிகராக சாந்தனு இருக்கிறார்.

-விளம்பரம்-

என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் இவரால் ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை. இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தான் சந்தித்தது. பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தார்கள். அதே போல தன்னை கேலி செய்பவர்களுக்கு கூட அவர்களிடம் கொச்சையாக பேசாமல் மிகவும் தன்மையாகவே பதில் அளிப்பார் சாந்தனு.

- Advertisement -

சாந்தனு குறித்த தகவல்:

மேலும், பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து வந்தாலும் வெற்றி படத்திற்காக போராடி வருகிறார் சாந்தனு. அந்த வகையில் ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் முதல் வெற்றியை பெற்று இருக்கிறார் சாந்தனு. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் வெளியாகி இருந்தது. தற்போது இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இது தொடர்பாக இவர் அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் சேதுபதி-சாந்தனு கூட்டணி:

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் ஃபேன் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள். இருந்தாலும் சிலர், இந்த கூட்டணி திருப்திகரமானதாக இல்லை என்று கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

அமுத பாரதி டீவ்ட்:

அந்த வகையில் திரைப்பட விமர்சகர் ஆன அமுத பாரதி என்பவர் டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர், மகாராஜாவுக்கு பிறகு விஜய் சேதுபதி தன்னுடைய இயக்குனரை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் அவுட்டேட்டானா நபராக இருக்கிறார் என்று சூசமாக விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். இந்நிலையில் இந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் சாந்தனும் பதிவு போட்டு இருக்கிறார்.

சாந்தனு பதிலடி:

அதில் அவர், யாரைப் பற்றியும் அப்படி சொல்லாதீர்கள் பிரதர். பொது மேடையில் வார்த்தைகளை புத்திசாளித்தானமாக பயன்படுத்துங்கள். அவர் ஒரு புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர். இன்னொருவருக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதை என்று கொஞ்சம் இருக்கு. இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை என்று கூறுகிறார். தற்போது இவரின் பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement