திருமணத்திற்காக புனித ஸ்தலத்தில் சிம்பு செய்த பரிகாரம். பாவம் இப்படி ஆகிட்டாரே. வைரலாகும் புகைப்படங்கள்.

0
705
simbu
- Advertisement -

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெண் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சிம்பு இவர் சினிமாவில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பல்வேறு பிரச்சினைகளையும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் .நடிகர் சிம்பு ஆரம்பத்தில் ரஜினி மகளை காதலித்து வந்தார். அதன் பின்னர் அந்த காதல் நயன்தாரா ,ஹன்சிகா என்று மாறிக் கொண்டே போனது. இதனால் வெறுப்படைந்த என்று இது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். டி ராஜேந்திரனின் இளைய மகனும் சிம்புவின் சகோதரருமான குறளரசனின் திருமணம் கடந்த 2019 ஆம் ஏப்ரில் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பின்னர் அனைவரின் கேள்வியாக இருப்பது சிம்புவின் திருமணம் எப்போது என்பது தான்.

-விளம்பரம்-

அதே போல சிம்பு யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற கேள்வியும் இருக்கிறது. இந்த திருமணம் முடிந்து பேசிய டி ராஜேந்தர் ‘அனைவரும் என் மகன் சிம்புவின் திருமணம் குறித்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.கண்டிப்பாக சிம்பு நடிகையை திருமணம் செய்து கொள்ள மாட்டார். அவருக்கு பிடித்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வார். மேலும், சிம்புவிற்கு ஏற்ற பெண் கிடைத்தால் அவருக்கு திருமணம் செய்து வைப்போம் கடவுள் புண்ணியத்தில் அது நிச்சயம் கூடிய விரைவில் நடக்கும் என்று கூறி இருந்தார்,

இதையும் பாருங்க : அவரு பாட்டையே அவர் புடிக்காத மாதிரி தான் பாடுவாரு – பங்கமாக கலாய்த்த Standup காமெடியன். சந்தோஷ் நாராயணன் அனுப்பியுள்ள மெசேஜ்.

- Advertisement -

சமீபத்தில் காதலர் தினத்தன்று நடிகர் சிம்பு , நாயுடன் பேசிய வீடியோ வைரலானது. அதில், இப்பொழுதுதான் நீ வளர்ந்து வந்துள்ளாய். இனிமேல் நீ ஒரு பையனை மீட் பண்ண வேண்டும், அந்த பையனுடன் உனக்கு சில விஷயங்கள் எல்லாம் நடக்க வேண்டும். அதுக்கு எனக்கு முதலில் கல்யாணம் ஆக வேண்டும். புரிகிறதா? நான் மட்டும் தனியாக இருக்கிறேன், நீ மட்டும் ஜாலியாக இருக்கிறாய் என்றால் அது நியாயம் கிடையாது. அதனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் நீ இரவெல்லாம் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். இந்த மாதிரி சிம்புவுக்கு கல்யாணம் ஆக வேண்டும், அப்போதுதான் நாம் நம் வாழ்க்கையில் ஜாலியாக இருக்க முடியும், இல்லையென்றால் இருக்க முடியாது என்று.

அதன் பிறகு நீ என்னிடம் கோபித்துக் கொள்ளக்கூடாது. புரிந்ததா? என் கஷ்டம் உனக்கு புரிகிறதா இல்லையா? ஏதாவது சொல்லு மேன், ஓ நீ கேர்ள் அல்லவா? என்று கூறி இருந்தார். அந்த வீடியோ பெரும் வைரலானது. இந்நிலையில் சிம்பு திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கங்கையாற்றில் தீபம் வழிபாடு செய்தது திருமணத்திற்கான பரிகாரம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement