அவரு பாட்டையே அவர் புடிக்காத மாதிரி தான் பாடுவாரு – பங்கமாக கலாய்த்த Standup காமெடியன். சந்தோஷ் நாராயணன் அனுப்பியுள்ள மெசேஜ்.

0
2099
santhosh

என்னதான் தொடலைக்காட்சியிகளில் பலர் ஸ்டான்ட் அப் காமெடிகள் செய்து வந்தாலும் யூடுயூபில் இருக்கும் பல ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலம் தான். அந்த வகையில் ‘Evem Standup Tamasha’ என்ற யூடுயூப் பக்கத்தில் ஜெகன் கிருஷ்ணன் என்பவர் தமிழ் சினிமா இசையமைப்பாளர்களின் இசையை படு பங்கமாக கலாய்த்து பிரபலமடைந்தவர். “Acadummy Award” என்ற பெயரில் இவர் ஹாரிஸ் ஜெயராஜ், ஹிப் ஹாப் ஆதி போன்றவர்களின் இசைகளை கேலி செய்து வெளியிட்ட வீடியோக்கள் பெரும் ஹிட் அடிததது.

அந்த வகையில் சமீபத்தில் இவர் பின்னணி பாடகி சைந்தவி, இசையமைப்பாளர் அருண்ராஜா காமராஜ், சந்தோஷ் நாராயணன் என்று பலரையும் பங்கமாக கலாய்த்து இருந்தார். அதிலும் சந்தோஷ் நாராயணன், தன்னுடைய பாடலையே எதோ பிடிக்காதது போல தான் பாடுவார் என்று கூறி அரங்கத்தை அதிர வைத்த ஜெகன் கிருஷ்ணன், சந்தோஷ் நாராயணனுக்கு எந்த பாடலை பாட வேண்டும் என்பது தெரியும் என்று கூறினார்.

இதையும் பாருங்க : நீண்ட வருடங்களுக்கு பின்னர் மகனை காட்டியா ம க பா- என்ன இப்படி வளந்துட்டாரு.

- Advertisement -

மேலும், சந்தோஷ் நாராயணன் இசையில், அருண் ராஜா பாடிய ‘நெருப்புடா’ பாடலை சந்தோஷ் நாராயணன் பாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று பாடியது பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்படி ஒரு நிலையில் ஜெகன் கிருஷ்ணனுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்துள்ள சந்தோஷ் நாராயணன், மரண கலாய், பெரிய ரசிகர் நான் என்று கூறியுள்ளார், இதற்கு ஜெகன் நன்றி தெரிவிக்க, ரஜினியின் கபாலி பட ஸ்டில் ஒன்றை அனுப்பியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.

கடந்த ஆண்டு இவருக்கும் ஹிப் ஹாப் ஆதிக்கும் கொஞ்சம் பிரச்சனை வெடித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் ஹிப் ஆதியின் நட்பே துணை படம் குறித்து கேலி, கிண்டல் செய்து இருந்தார். அகாடமி விருது என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது . ஆதியின் ஒவ்வொரு பாடல் வரிகளையும் எவ்வளவு கிண்டல் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு கேலிசெய்து இருந்தார் ஜெகன். அதிலும் படத்தில் ஹிப்ஹாப் ஆதி பேசிய வசனங்கள் எல்லாம் பிற படங்களில் இருந்து காப்பி செய்யப்பட்டது என்றும்கூறி பங்கம் செய்தார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியை யூட்யூபில் பல லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து இருந்தனர். அதே போல சமூக வலைத்தளத்திலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்தனர். இதனை பார்த்த ஹிப் ஆதி கூறியது, ஊன்றி பிழைக்காதே! ஆம், ஒருவரின் உழைப்பை ஏளனம் செய்து அதில் நீ சேர்க்கும் பணமோ, புகழோ நிலைக்காது. ஒருவர் முன் மண்டியிட்டு அவரை ஊன்றி ஊன்றி நீ பிழைக்கும் போது உன் முட்டி தேய்ந்து போவது மட்டுமல்ல, சூழ்நிலை சரியில்லை என்றால் உடைந்தும் போகலாம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement