என்னது இந்த படங்களை இயக்கியது இந்த நடிகரா ? ஆச்சரியத்தில் ரசிகர்கள் ! எந்த படம் தெரியுமா ?

0
24582

‘பாயசம் எங்கடா..’ இந்த டைலாக்கை யாராலும் மறக்க முடியாது. இந்த ஒரு வசனத்தின் மூலம் நம்மில் பலருக்கும் அறிமுகம் ஆனவர் சிங்கம் புலி. நமக்கு காமெடி நடிகராக அறிமுகம் ஆன இவர் உண்மையில் எஞ்சினியரிங் படித்த ஒரு இயக்குனர் ஆவார்.

singam puli

இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்தில் 1968ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப்படிப்பை அங்கயே முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் இஞ்சினியரிங் படித்துள்ளார் சிங்கம் புலி. அதன்பின்னர் இயக்குனர் ஆசையில் சென்னை வந்த சிங்கம்புலி, சுந்தர் சியிடம் துணை இயக்குனராக வேலை செய்துள்ளார். அஜித்தின் உன்னைத்தேடி படத்திற்கான கதையை எழுதியது இந்த சிங்கம் புலி தான்.அதன்பின்னர் அந்த கதையை சுந்தர்.சி இயக்க அந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார். இவர் இயக்கிய முக்கியமான படங்கள், நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.

2002ல் வெளிவந்த அஜித்தின் ரெட் படத்தை இயக்கியது இவர்தான்.

red

மேலும் 2005ல் வந்த சூர்யாவின் மாயாவி படத்தை இயக்கியதும் இவர்தான்.

mayavi

தற்போது காமெடியனாக நடித்து வந்தாலும் இயக்குனர் வேலையை விட்டுவிட கூடாது என இருக்கிறார். இதனால் சமுத்திரகனியை வைத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார் சிங்கம் புலி. இந்த படத்தின் அறிவிப்புகள் இன்னும் சில மாதங்களில் வெளியாகும்.