நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டில் அமைத்துள்ள தோட்டம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும் தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் பல விருது வழங்கும் விழாவில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் எந்த ஒரு மேடையில் விருதை வாங்கினாலும் எந்த மறைந்த தந்தையை பற்றி பேசாமலும் இருந்தது இல்லை. ஆனால், இதுவரை அவரது தாய் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டது கிடையாது.
இதையும் பாருங்க : நயன்தாராவுக்கே இப்போ வாழ்க்க கிடச்சிருக்குன்னா அதுக்கு நான் தான் காரணம், தியாகி சார் நான் – நயனுடன் நடித்த நடிகர்.
இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடன் வீட்டு தோட்டத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதே போல தனது தோட்டத்தில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், லாக்டவுனுக்கு முன்பு இந்த தோட்டத்தை அமைத்ததாகவும் காய்கறிகள் கீரை வகைகளை பயிரிட்டுள்ளதாகவும், இங்கே முழுவதும் ரெடி பண்ணனும் ஆசை, தோட்டம் முழுமை பெற்றதும் முழுவதையும் காட்டுவதாக தனது வீடியோவில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர், அயலான், டான் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்துள்ள ‘அயலான்’ படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியானது. இசைப்புயல் ஏ ஆர் ரஹமான் இசையமைத்துள்ள இந்த பாடல் யூடுயூபில் சில மணி நேரத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அதே போல இவருக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து 5 நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதற்காக அவருக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.