நயன்தாராவுக்கே இப்போ வாழ்க்க கிடச்சிருக்குன்னா அதுக்கு நான் தான் காரணம், தியாகி சார் நான் – நயனுடன் நடித்த நடிகர்.

0
7515
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் நடிகை நயன்தாரா, சிம்புவை காதலித்து வந்தார். அதன் பின்னர் பிரபுதேவாவை காதலித்தார். ஆனால், இந்த இரண்டு காதலும் நயன்தாராவிற்கு தோல்வியில் தான் முடிந்தது. அதன் பின்னர் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் மீண்டும் முன்னணி நடிகையாக வந்தார். அதன் பின்னர் இவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.

இதையும் பாருங்க : ஷிவங்கியை திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் – காரணம் அவரின் பேசிய இந்த வீடியோ தான் (தெரிஞ்சி தான் பண்றாங்களா ? தெரியாம பண்றாங்களா ? )

- Advertisement -

இந்த காதல் தான் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நடிகரும் பிக் பாஸ் போட்டியாளர் சுசித்ராவின் கணவருமான கார்த்திக் குமார், நயந்தாராவிற்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான் என்று கூறியுள்ளார். நடிகர் கார்த்தி, மாதவன் நடிப்பில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர், அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்த இவர், பின்னர் ஸ்டான்ட் அப் காமெடியான இருந்து வருகிறார்.

மேலும், இவர் நயன்தாராவுடன் ‘யாரடி நீ மோகினி’ படத்திலும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் தனது மேடை காமெடியின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் சினிமாவை பொறுத்தவரை அமெரிக்க மாப்பிள்ளைக்கு கல்யாணமே நடக்காது. நானே ஷாலினி, லைலா, ராணி முகர்ஜி, நயந்தாரா என்று பலரை தானம் செய்து இருக்கிறேன். நயன்தாராவிற்கே இப்போ வாழ்க்கை கிடைத்துருக்குன்னா அதுக்கு நான் தான் காரணம், தியாகி சார் நான் ‘என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement