தமிழ் சினிமாவில் எத்தனையோ மறக்க முடியாத குழந்தை நட்சத்திரங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை கல்யாணியும் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் பூர்ணிதா. தமிழில் இவர் அள்ளித்தந்த வானம் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார்.
பின் நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான “ஜெயம்” படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பூர்ணிதா. அந்த கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானதால் இவரது பூர்ணிதா என்ற பெயரை மறந்து கல்யாணி என்றே எல்லோரும் அழைக்கபட்டார்கள். மேலும், இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டும் இல்லாமல் பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார்.
கல்யாணி குறித்த தகவல்:
திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த போதே சீரியலில் கல்யாணி நடித்துக்கொண்டிருந்தார். பின்னர் இவர் சின்னத்திரையில் செட்டில் ஆகி விட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கல்யாணி சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் ஜீ தமிழ் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார்.
அதற்கு பின்னர் இவர் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும், இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் அழுது கொண்டே நடிகை கல்யாணி பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர், இன்று என்னுடைய மாதங்களில் மிக குறைந்த நாட்களில் ஒன்றாகும்.
தனிமையில் இருந்தேன்
நான் தனிமையில் இருந்தேன். என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்து விட்டேன். நவ்யா என்னிடம் வந்தாள். அவளால் நான் பாதிக்கப்படுவதை அவள் உணர்ந்தாள் . ஆனால், இது ஒரு குழந்தையின் உடைய மன ஆரோக்கியத்தை கெடுப்பது அல்ல. அவள் புரிந்து கொண்டாள். பச்சாதாபம் உண்மையில் கற்பிக்க முடியாது. அது அவர்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளது. அதை நாம் வெளியே கொண்டு வர வேண்டும்.
குழம்பிய ரசிகர்கள் :
என் மகள் எப்படி உலகை பார்க்க போகிறாள் என்று எனக்கு கற்றுக் கொடுத்தது. நவ்யா உருவாக்கிய இன்று நான் இருக்கும் நபர், ஐ லவ் யூ என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இவருடைய வீடியோ தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே விஜே கல்யாணிக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? இருவரும் பிரிந்து விட்டீர்களா? என்ன பிரச்சனை? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.