திருமணத்தில் தனது தந்தை. அன்னையர் தினத்தில் உருக்கமான புகைப்படத்தை பகிர்ந்த சூரி.

0
2462
soori
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக சூரி திகழ்ந்து வருகிறார். விவேக், சந்தானத்திற்கு பிறகு காமெடியில் முன்னணி நடிகராகவும் சூரி திகழ்ந்து கொண்டிருக்கிறார். சீரியல் நடிகனாக தான் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணில கபடி குழு படத்தின் மூலம் தான்.

-விளம்பரம்-
Actor Soori loses his father - Tamil News - IndiaGlitz.com

இந்த படத்தில் இவருடைய பரோட்டா காமெடி காட்சி தான் வேற லெவல்ல இருக்கும். இதனாலேயே இவரை அனைவரும் பரோட்டா சூரி என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இந்த படத்தை தொடர்ந்து இவர் நான் மகான் அல்ல, களவாணி, குள்ளநரிக்கூட்டம், மனம்கொத்திபறவை, சுந்தரபாண்டியன், கேடி ப் எல்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நய்யாண்டி, நிமிர்ந்து நில், மான் கராத்தே, ரஜினி முருகன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

தமிழில் விஜய், அஜித், சூர்யா,விக்ரம் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் சூரி. இந்நிலையில் நடிகர் சூரி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். மேலும், சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள், மக்கள் என பலரும் தங்களுடைய அன்னையர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் சூரி அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தாய்க்கு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தன்னுடைய திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு கூறியிருப்பது, உலகத்தில் உள்ள அனைத்து தெய்வமும் ஒரே உருவத்தில் தெரிகிறார்கள் என்றால் அது நம் தாய் ஆகத்தான் இருக்க முடியும். அத்தனை அம்மாக்களுக்கும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சூரி அவர்கள் தன் தாய், தந்தையுடன் இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சூரியின் அப்பா இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement