நடிகைகள் குறித்து மோசமான கேள்வி கேட்ட ரசிகர் – கோபத்தில் சந்தீப் கிஷன் கொடுத்த பதில்.

0
627
Sandeep
- Advertisement -

நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து நபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் சந்தீப் கிஷன் கோபமாக அளித்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சந்தீப் கிஷன். இவர் தமிழில் யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார். ஆனால், அதற்கு முன்பே இவர் நிறைய தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பின் 2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சந்தீப் கிஷன் அவர்கள் மாயவன், கசடதபர, நெஞ்சில் துணிவிருந்தால், மைக்கேல் போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் இவர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

சந்தீப் கிஷன் திரைப்பயணம்:

இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் தெலுங்கு மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

ஊரு பேரு பைரவகோனா படம்:

அந்த வகையில் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியாகியிருக்கும் படம் ‘ஊரு பேரு பைரவகோனா’. இந்த படத்தில் வர்ஷா பொல்லாமா, காவ்யா தாப்பர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை வி ஐ ஆனந்த் இயக்கி இருக்கிறார். கடந்த 16ஆம் தேதி இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் படம் வெளியான பத்து நாட்களிலேயே 25.11 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

-விளம்பரம்-

செய்தியாளர்கள் சந்திப்பு:

இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பட குழுவினர் நேற்று ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அதில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு நடிகர் சந்தீப் கிஷன் பதில் அளித்து வந்தார். அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர், இந்த படத்தில் இரண்டு நடிகைகளுடன் நீங்கள் அதை செய்து இருக்கிறீர்கள். இதில் எந்த நடிகையுடன் அப்படி நடித்தது உனக்கு பிடித்திருந்தது .என்று இரட்டை அர்த்தத்தில் கேட்டிருந்தார். இதனால் கோபமடைந்த சந்தீப் கிஷன், அதற்கு பதில் அளிக்காமல் தவித்தார்.

சந்தீப் கிஷன் பதில்:

தொடர்ந்தும் அதே கேள்வியை அந்த நபர் வற்புறுத்தி கேட்டுக் கொண்டிருந்தார். பின் சந்தீப் கிஷன், நான் அந்த கேள்விக்கு பதில் அளிக்க மாட்டேன். இரட்டை அர்த்தத்தில் கேள்வி கேட்காதீர்கள். உங்களுக்கு வேறு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் பதில் தருகிறேன் என்று கூறியிருந்தார். இருந்தாலும் விடாமல் அந்த நபர் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்கப் பார்த்தார். அதற்கு சந்தீப் கிஷன், நான் இரண்டு நடிகைகளுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்வியை தெளிவாக கேளுங்கள். நீங்கள் கேட்கும் முறை சரி இல்லை என்று பதில் அளித்து இருக்கிறார்.

Advertisement