ஆமாம், உண்மை தான். நான் தான் ‘தளபதி 66’ படத்தை இயக்க போகிறேன் – தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் பேட்டி.

0
1810
thalapathy-65
- Advertisement -

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்த பேச்சு வார்த்தைகள் படு மும்மரமாக நடைபெற்று வருவதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை இது உண்மையானால் மாஸ்டர் படத்தில் வந்த பவானி கேரக்டரை விட தளபதி 65 வில்லன் கேரக்டர் வெறித்தனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் பாருங்க : 5 வருஷமா அதிமுக ஆட்சின்னு சும்மா இருந்தீங்கள – தனது தோழி பிரச்சனை குறித்து கேள்விக்கு ஷாலு சம்மு பதில்.

- Advertisement -

விஜய் 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்றது. தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்புகள் இந்தியாவிலேயே திட்டமிடபட்டுள்ளது. விஜய் 65 படத்தை தொடர்ந்து விஜய்யின் 66 வது படத்தை யார் இயக்குவர்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. இப்படி ஒரு நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் தான் இயக்கப்போவதாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி உறுதி செய்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதனை உறுதி செய்துள்ள அவர், எனது திரையுலகப் பயணத்தில் இப்படம் மிகப் பெரும் பட்ஜெட் படமாக இருக்கும். கோவிட் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு படம் பற்றிய அறிவிப்பு வரும். தில் ராஜு இப்படத்தைத் தயாரிக்கிறார், தளபதி விஜய் நாயகனாக நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.  தமிழில் ‘தோழா’, மகேஷ்பாபு நடித்த ‘மகரிஷி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ‘மகரிஷி’ திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் வென்றார் வம்சி. இவரும் விஜய்யும் இணையும் படம் பான்-இந்தியா படமாக உருவாக உள்ளது.

-விளம்பரம்-
Advertisement