ஆல்பா மேல்,அனிமல் படம் – இரு மகள்களுக்கும் குஷ்பூ போட்ட கண்டிஷன். என்ன தெரியுமா?

0
213
- Advertisement -

அனிமல் படம் குறித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ கூறியிருக்கும் கருத்த தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ராஷ்மிகா மந்தனா-ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் அனிமல். இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. தந்தை-மகன் இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. மேலும், இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழி ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்த படம் பெண்களுக்கு எதிரானது, படம் முழுவதும் ஆண் சிந்தனை இருப்பதாக விமர்சித்திருக்கின்றார்கள்.

- Advertisement -

அனிமல் படம்:

இருந்தாலும், இந்த படம் இதுவரை 900 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும், இந்த படம் ஒடிடியில் வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து கடுமையான சர்ச்சைகளும் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றது. திரைப்பிரபலங்கள் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த படத்தை விமர்சித்து பேட்டி அளித்து இருக்கிறார்கள். அந்த வகையில் அனிமல் படம் குறித்து சமீபத்தில் கருத்தரங்கு ஒன்றில் குஷ்பு கூறியது, ரன்பீர் கபூரின் அனிமல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.

குஷ்பூ பேட்டி:

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக துன்புறுத்தல்கள், துஸ்பிரயோகங்கள், திருமணத்திற்கு பின் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், முத்தலாக் போன்ற பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். அனிமல் போன்ற ஒரு பெண் வெறுப்பு, ஆணாதிக்கம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் படங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. அதை வெற்றி பெற செய்யும் மக்களின் மனநிலை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

-விளம்பரம்-

அனிமல் படம் குறித்து சொன்னது:

மேலும், அர்ஜுன் ரெட்டி மற்றும் கபீர் சிங் போன்ற படங்களிலும் கூட பிரச்சனை இருந்தது. ஆனால், நான் இயக்குனரை குறை கூற மாட்டேன். அவரைப் பொறுத்தவரை வெற்றிதான் முக்கியம். சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை படங்களில் காட்டுகிறோம். நாங்கள் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பற்றி பேசுகிறோம் என்று சொல்வார்கள். ஆனால், மக்கள் இந்த மாதிரி படங்களை பார்க்கிறார்கள். அவர்கள் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

குஷ்பூ மகள்கள் சொன்ன அறிவுரை:

என் மகள்கள் அதுபோன்ற படங்களை பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஆனால், அது எதைப் பற்றி பேசுகிறது என்பதை அறிய விரும்பியதால் அவர்கள் அனிமல் படத்தை பார்த்தார்கள். படத்தைப் பார்த்துவிட்டு வந்து, அம்மா தயவு செய்து அந்த படத்தை பார்க்காதீர்கள் என்று எச்சரித்தார்கள். இப்படிப்பட்ட படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உருவாகும் போது நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

Advertisement