கிரிக்கெட் விளையாடும் சூர்யாவின் மகள்..! வைரலாகும் வீடியோ..!

0
289
Surya

தமிழ் சினிமாவில் விஜய் , அஜித்திற்கு பின்னர் நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் அவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

சூர்யா- ஜோதிகா தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தியா ஒரு பேட்மின்டன் வீராங்கனை. சிறு வயது முதலே பேட்மின்டன் விளையாட்டு மீது மிகுந்து அர்வம் கொண்டவர் தியா. அவருக்கு இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து தான் ரோல் மாடல்.

தியா, பேட்மின்டனில் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டுள்ளார் போல தான் தெரிகிறது. சமீபத்தில் தியா, கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தியாவிற்கு மகளீர் கிரிக்கெட் வீராங்கனை மைதிலி ராஜ் தான் கிரிக்கெட்டில் மிகவும் பிடித்த நபர் என்றதும் குறிப்பிடத்தக்கது.