20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலா அண்ணனுடன் – (அப்போ, பிதாமகன் படத்த மறந்துட்டாரோ)

0
941
bala
- Advertisement -

சூர்யா– பாலா கூட்டணியில் மீண்டும் உருவாக உள்ள புது படம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து வருகிறார். சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா– பாலா ஆகியோரின் இணைப்பில் புதியதாக படம் வரப் போவதாக தற்போது சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்த செய்தியை சூர்யா அவர்கள் தன் அப்பா மற்றும் பாலா உடன் மூவர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கூறி உள்ளார்.

-விளம்பரம்-
மீண்டும் இணையும் சூர்யா - பாலா கூட்டணி!

அதில் சூர்யா கூறி இருப்பது, என்னை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஒரு அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என்று பதிவிட்டிருந்தார். இப்படி இவர் பதிவிட்ட டீவ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : கிளாமர் குத்தாட்டத்தில் ரங்கஸ்தலம் சமந்தாவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

மேலும், பாலா– சூர்யா இணைப்பில் உருவாக இருக்கும் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நந்தா திரைப்படம் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் கடைசியாக பாலா அவர்கள் ஜோதிகாவை வைத்து நாச்சியார் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து உருவாக உள்ள இந்த படம் அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்துள்ளது. ஆனால், சூர்யா இறுதியாக பாலாவுடன் ‘பிதாமகன்’ படத்தில் பணியாற்றி இருந்தார். அந்த படம் 2003 ஆம் ஆண்டு தான் வெளியானது. ஆனால், அந்த படத்தை கணக்கில் கொள்ளாமல் பாலா இயக்கத்தில் தான் ஹீரோவாக நடித்த நந்தா படம் வெளியான 2001 ஆம் வருடத்தை குறிப்பிட்டே சூர்யா இப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement