எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை, 15ஆயிரம் அபராதம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு. இதான் காரணம்

0
219
- Advertisement -

பெண் பத்திரிக்கையாளர் மீதான வழக்கு தொடர்பாக நடிகர் எஸ்வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ் வி சேகர். இவருடைய நாடகம் வசனங்கள் நகைச்சுவையாக அறியப்பட்டாலும் அவற்றை நெருடலான இரட்டை அர்த்தங்களும் விமர்சிக்கப்படுவது உண்டு. தற்போது இவர் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று முகநூல் பக்கத்தில் எஸ் வி சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக கருத்துக்களை ஷேர் செய்து இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. பின் பத்திரிக்கையாளர்கள் சங்கம்அளித்த புகாரின் பேரில் இவர் மீது பல்வேறு சட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது எம்பி எம்எல்ஏ கலை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இவருக்கும் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே பிரச்சினைகள நிறைய ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

எஸ் வி சேகர் குறித்த சர்ச்சை:

மேலும், இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு எஸ் வி சேகர் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். பின் அவருக்கு முன் ஜாமின் மறுத்தது. அதன் பின்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் போலீசார் பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளில் எஸ் வி சேகர் காணப்பட்டார். பின்னர் அவருக்கு 2018 ஜூன் மாதம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின் இவர் இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

-விளம்பரம்-

எஸ் வி சேகர் கொடுத்த விளக்கம்:

பின் இது குறித்து எஸ் வி சேகர், நான் பகிர்ந்த கருத்தை உடனடியாக நீக்கிவிட்டேன். அதற்காக மன்னிப்பும் கூறிவிட்டேன். அதனால் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இவரின் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை 6 மாதங்களில் விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கவும் உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் எஸ் வி சேகர்.

நீதிபதி தீர்ப்பு:

விசாரணையில் எஸ்.வி சேகர், என் கண்ணுக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தபோது தவறுதலாக கை விரலானது send பட்டனை கிளிக் செய்துள்ளது. அதனாலதான் அந்த செய்தி பகிரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக பலரும் விமர்சித்து இருந்தார்கள். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் எஸ்வி சேகர் மீது கொடுக்கப்பட்ட புகார் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.வி சேகருக்கு கிடைத்த தண்டனை:

எனவே இந்திய தண்டனை சட்டம் 504 அமைதியை சீர் குலைத்தல், 509 தெரிந்த குற்றம் என கருதி மிரட்டல் விடுத்தல், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பின் எஸ் வி சேகர் அபராத தொகையை செலுத்தி இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து உள்ளார். இதனால் தண்டனை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement