சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதில் ஒன்று, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் கணவரான தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதுதான் அவரது முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் எந்த அளவு வெற்றி பெற்றது என்பதை விட இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தது.
Namakku mattum than ippadi thonudha 😄😅 pic.twitter.com/krUjkRITBu
— 🎬 A.Ramana Rishi 🎞️ (@cinemaismylove) May 7, 2023
இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார் அதன் பின்னர் 8 ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை எடுத்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மே மாதம் ஏழாம் தேதி தொடங்கியது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகனாக நடித்டுள்ளனர்.
மேலும் இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் தங்கையாக பிரபல நடிகை ஜீவிதா நடிக்கிறார். மேலும் காமெடி நடிகர் செந்தில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ரஜினியின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டு இருந்தது.
இப்படத்தின் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். வெளிவந்த இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த லுக் ரஜினிகாந்திற்கு செட்டாகவில்லை என கூறி வருகிறார்கள். இதனால் வடிவேலு, ஓமக்குச்சி நரசிம்மன், லிவிங்ஸ்டன் என்று பலரது புகைப்படங்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். மேலும், dad’s little princesஐ நம்பினால் இப்படி தான் என்று கேலி செய்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் ரஜினியை கேலி செய்து வந்த memeஐ வைத்து தங்கள் கடையை விளம்பரம் செய்துள்ளது தொப்பி வாப்பா நிருவனம். ரஜினியின் இந்த போஸ்டரை தொப்பி வாப்பா பிரியாணி கடையில் இருக்கும் லோகோவுடன் ஒப்பிட்டு கலாய்த்து மீம் ஒன்று வைரலானது. அதனை தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள தொப்பி வாப்பா நிறுவனம் ‘தொப்பி வாப்பா குழுமம் சார்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படம் லால் சலாமுக்கு ஒரு சலாம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறது.
இது தொப்பி வாப்பா பிரியாணிக்கு கிடைத்த வெற்றி.. 😎#found_on_the_internet #lalsalam pic.twitter.com/IdgMxGslyk
— T-Bag (@T_Bag_Reloaded) May 8, 2023
ஏற்கனவே ரஜினி அவரது மற்றொரு மகளான சௌந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தில் நடித்திருந்தார். பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் மாபெரும் தோல்விப் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து சௌந்தர்யா படம் எடுப்பதை நிறுத்திவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.