யாருக்கும் உதவி செய்யல, தர்மம் வெல்லட்டும் – யூனியன் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்திய மனோ.

0
349
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் இதுவரை வாக்குரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களும் வாக்களிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இதை எடுத்து ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்கள். இதனால் இந்த தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

-விளம்பரம்-

இதனை அடுத்து தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தேர்தலுக்காக விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது. இது 2023 முதல் 2026 ஆம் ஆண்டிற்காக நடக்கும் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தீனா போட்டியிட்டு இருந்தார்.

- Advertisement -

பாடகர் மனோ பேட்டி:

இவரை எதிர்த்து சபேஷ் நின்றார். இறுதியில் இந்த தேர்தலில் சபேஷ் வெற்றி பெற்று தலைவரானார். இந்த நிலையில் பாடகர் மனோ வாக்களித்துவிட்டு இசை கலைஞர்கள் சங்கம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், கேவி மகாதேவன், எம்எஸ் விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்களிடம் வாசித்த கலைஞர்கள் இன்னும் உயிரோட தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நோய்வாய்ப்பட்டதால் நடக்க முடியவில்லை.

இசை கலைஞர் சங்கம் குறித்து சொன்னது:

சினிமா துறையில் முதலில் தொடங்கப்பட்ட யூனியன் இசைக்கலைஞர்கள் யூனியன் தான். ஆனால், இதற்கு சரியான கட்டிடங்கள் கிடையாது. கடந்த ஐந்து வருடமாக எதுவுமே இல்லை. இளையராஜா சார் எங்களுக்கு உதவி செய்யலாம் என்று பார்த்தபோது தான் கொரோனா வந்தது. இசை கலைஞர்களுக்கு அசோசியேட் உறுப்பினர்கள் இப்போது நிறைய உருவாகியிருக்கிறார்கள். எல்லா சங்கத்திலும் உறுப்பினர்கள் இறந்து போனால் 4 லட்சம் கொடுத்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இசை கலைஞர் சங்கம் நிலை:

இசை கலைஞர் சங்கம் ஒரு லட்சம் கொடுக்கக்கூடிய நிலைமையில் கூட இல்லை. அது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதனால் இனிமே வரும் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து சங்கத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும். முன்னாள் தலைவர் தீனா முயற்சி எடுத்து பண்ணி இருந்தால் நிறைய இசை கலைஞர்கள் சப்போர்ட் பண்ணி இருப்பார்கள். ஆனால், யாருமே போய் கேட்கவில்லை. கொரோனா சமயத்தில் கூட யாரும் யாருக்கும் உதவி செய்யவில்லை.

பாடகர் மனோ சொன்ன அறிவுரை:

நான் தனிப்பட்ட முறையில் 250 பேருக்கு சாப்பாட்டுக்கான பொருட்கள் உதவியிருக்கிறேன். அந்த அளவிற்கு கூட இந்த யூனியன் செய்யவில்லை. அதை நினைக்கும் போது தான் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. எது பண்ணாலும் தர்மம் வெல்லும். சுசீலா, ஜானகி, டி எம் எஸ் உட்பட பலர் விட்டுப்போன சொத்து எவ்வளவோ இருக்கிறது. அதை நம்பி இருக்கும் கலைஞர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஏற்கனவே கங்கை அமரன் இசைக் கலைஞர்கள் சங்கம் குறித்து பேட்டி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement