வடிவேலுக்கு சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைல் இருந்தா இப்படி தான் இருப்பார் – வடிவேலுவை Xerox எடுத்தார் போல் இருக்கும் நபர்.

0
1750
vadivelu

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக காமெடியின் கிங் என்ற பட்டதோடு திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள்.

இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார். இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு விதித்தது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். இருந்தாலும் இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறாத தொலைக்காட்சிகள் இல்லை.

இதையும் பாருங்க : ஷகிலாவின் தத்து திருநங்கை மகள் மிளாவை மேக்கப் இல்லாமல் பார்த்துள்ளீர்களா. இதோ பாருங்க.

- Advertisement -

மேலும், சோஷியல் மீடியாவில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் சரி அதற்கு வடிவேலுவின் காமெடியை அடிப்படையாக வைத்தே மீம்ஸ் போட்டு வந்தவர்கள். சமீபத்தில் தான் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது. இதனையடுத்து தற்போது வடிவேலு அவர்கள் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படம் குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவை போல் அச்சு அசலாக அப்படியே உருவமுள்ள ஒரு நபரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லைங்க நடிகர் வடிவேலின் தம்பியாம். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் அதிகமாக வைரல் ஆவதால் ரசிகர்கள் உண்மையிலேயே இவர் வடிவேலுவின் தம்பியா என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement