சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இளமை போன பின்னரும் இவர் ஷகீலாவாக பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிதான்.அதே போல இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இதையும் பாருங்க : எனக்கு ஏன் ‘சல்யூட்’ அடிக்கல, ‘சல்யூட்’ அடிங்க – போலீசிடம் தீனா பட வில்லன் நடந்து கொண்ட விதத்தால் சர்ச்சை. வீடியோ இதோ.
மேலும், இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறாராம். அதே போல இவர் சில சீரியல்களில் கூட நடித்து இருக்கிறாராம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளார். அவருடைய உண்மையான பெயர் ஹிஷாம். துபாயை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் போது இவருடன் படித்த ஒரு பாக்கிஸ்தான் பையனுக்காக பெயில் ஆனாராம்.
அப்போது தான் ஒரு பையனுக்காக நாம் ஏன் இதை செய்கிறோம் என்று உணர்ந்து தன்னுள் பெண்ணை இருப்பதை உணர்ந்து பெண்ணாக மாறினாராம். இப்படி ஒரு நிலையில் மிளா, மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.