வடிவேலு இப்படிப்பட்டவரா ? அடம் பிடிக்கும் வடிவேலு ! விவரம் உள்ளே

0
968
Actor-vadivelu
- Advertisement -

நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள். காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் இந்த இம்சை அரசனுக்கு மேலும் ஒரு இம்சை வந்துள்ளது.

vadivelu

தமிழில் சிம்புதேவன் இயக்கி 2006 ல் வெளிவந்த படம் 23 ஆம் புலிகேசி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில் மீண்டும் வடிவேலுவை வைத்து 24 ஆம் புலிகேசியை இயக்கவிருந்தது. 23 ஆம் புலிகேசியை தயாரித்த ஷங்கர் தான் இப்படத்தினையும் தயாரிப்பதாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் வடிவேலு இப்படத்தில் நான் நடிக்கமாட்டேன் என கூறி உள்ளார். இதற்க்கு காரணம் படத்தில் பெரிய நடிகர்களின் பட்டாளம் இருக்க கூடாது என்றும் படத்தில் தனது ஆடை வடிவமைப்பாளர் தான் இருக்க வேண்டும் என்றும் பல நிபந்தனைகளை கூறியுள்ளார்.

vadivelu 23 pulikesi

இதையடுத்து படத்தில் நான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. படத்தை முடித்து தரும்படியும் இல்லையேல் நஷ்டத்தை தரும்படியும் பட குழுவினர் புகார் அளித்துள்ளனர்.

vadivelu actor

ஏற்கனவே அரசியல் செயல்படுகளினால் சினிமாவில் பல ஆண்டுகள் கானாமல் போனார் வடிவேலு, இந்த புகாரை அடுத்து அவரது பெயர் மேலும் சரிந்துள்ளது.

Advertisement