அஜித் மடியில் அமர்ந்து இருக்கும் இந்த பா.ரஞ்சித் பட ஹீரோ யார் தெரியுதா?

0
452
- Advertisement -

கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தமிழ் சினிமாவில் அஜித் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கிறது. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித்தின் நடிப்பில் வெளிவந்த படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் வினோத் குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதை அடுத்து அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் பின் விலகிவிட்டார். அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

- Advertisement -

இந்த படத்திற்கு விடாமுயற்சி என்று பெயர் இடப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் இளம் வயது புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித் இளம் வயதில் இருக்கிறார். அதில் அஜித்தின் மடியில் ஒரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறார் . அவர் வேறு யாரும் இல்லைங்க, அட்டகத்தி பட நடிகர் தினேஷ் தான்.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தினேஷ். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆனால், இந்த படத்திற்கு முன்பே இவர் ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம் போன்ற பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது அட்டகத்தி படம் தான். அதிலிருந்து இவரை அட்டகத்தி தினேஷ் என்று பலரும் அழைக்க ஆரம்பித்தார்கள். இதற்கு பிறகு இவர் திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து, இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு, உள்குத்து, அண்ணனுக்கு ஜே போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இவர் நடிப்பில் வெளியான முக்கிய படங்களில் ஒன்று தான் குக்கூ.

இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் விக்டிம், பல்லு படாம பாத்துக்க, லப்பர் பந்து போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து என்ற படத்தில் தினேஷ் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்தும் சில படங்களில் கமிட்டாக இருப்பதாக கூறப்படுகிறது

Advertisement