அதெல்லாம் அவங்களுக்கு கிடைக்க கூடாதுனு தான்- பிள்ளைகள் குறித்து மாணவியின் கேள்விக்கு விஜய் சொன்ன பதில் அறிய வீடியோ இதோ.

0
1438
Vijay

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இளைய தளபதி விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒரு ரொமான்டிக் ஜோடியாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.

சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.விஜய்யின் மகனான சஞ்சய் மற்றும் மகளான திவ்யா ஷாஷா இருவருமே விஜய் படத்தில் நடித்திருக்கிறார்கள். இதில் தஞ்சை விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் தோன்றியிருந்தார். அதேபோல விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றி இருந்தார்.

- Advertisement -

மேலும், விஜய் மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். மேலும், இவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை. இந்த விளையாட்டில் நிறைய பரிசுகளை கூட வாங்கியிருக்கிறார். அதே போல விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் படித்து முடித்து வந்துவிட்டு விரைவில் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் பள்ளி விழா ஒன்றில் கலந்துகொண்ட பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஜய்யிடம் ஒரு மாணவி உங்களின் மகன் ஜேசன் மற்றும் மகள் திவ்யா இருவரின் புகைப்படம் கூட வெளிவராமல் மறைத்து வருவதற்கான காரணத்தை கேட்டுள்ளார்.இதற்கு பதிலளித்துள்ள விஜய் “அவர்களுக்கு எந்த ஒரு முக்கிய துவமும் கிடைக்காமல், அவர்கள் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்பதற்காக தான், அவர்களின் புகைப்படம் கூட வெளியாகாமல் உள்ளது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement