புகழ் கார் வாங்கிட்டாரு, ஆனா பாலா – வைரலாக பரவி மீம் குறித்து புகழ் பதிவிட்ட பதில். நெகிழ்ந்து போன பாலா.

0
3526
pugazh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த இரண்டு சீசனும் வெற்றி பெற முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் பரவியிருப்பது நம்ம புகழ் தான்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளுகிறார் புகழ். கடலூரை சேர்ந்த இவர் வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கிறார் அப்போது இவரை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இருக்கிறார்கள் அதன் பின்னர் இவர் மேக்கானிக் கடையில் வேலை செய்து இருக்கிறார் பின்னர் வாட்டர் வாஷ் கடையில் கூட வேலை செய்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : பணத்துக்காக பண்ணிட்டு இப்போ நியாயம் பேசாதீங்க – கமன்ட் செய்த ரசிகருக்கு ஷகீலா கேட்ட கேள்வி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இப்படி ஒரு நிலையில் புகழ்,ஒரு புதிய காரை வாங்கி இருந்தார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள புகழ். என் பரம்பரையிலேயே வாங்கிய முதல் கார் இதுதான். இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் கொடுத்த ஆதரவு தான். இதை என்னுடைய மிகப்பெரிய கனவு. எத்தனையோ நபர்களில் காரை நான் தொடைத்திறக்குகிறேன். வாட்டர் வாஷ் செய்திருக்கிறேன். பத்து ரூபாய் இருபது ரூபாய் கொடுப்பார்கள் ஆனால், இன்று நான் சொந்த கார் வாங்கி இருக்கிறேன். என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக பேசி இருந்தார்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், விஜய் டிவி நகைச்சுவை பிரபலமான பாலாவின் ரசிகர் ஒருவர் மீம் ஒன்றை ஷேர் செய்து இருந்தார். அதில் வர அழ, ஏன் என அவரிடம் இன்னொரு ரசிகர் கேட்க, அந்த ரசிகரோ, பாலா கார் வாங்கவில்லை என தமது வருத்தத்தை பதிவு செய்ய, இதை அறிந்த புகழ், ‘இது பாலாவின் காரும் தான் நண்பா.. நாங்க வேறவேற இல்லை!’ என்று பதில் அளிக்க, இதைப் பார்த்த பாலா, “லவ் யூ மாமே.. நம்ம கார் இது” என புகழுக்கு பதில்அளித்துள்ளார். இவர்கள் இருவரின் நட்பை பார்த்து பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement